சென்னை, டிச.29 முன்னாள் மாணவர்கள், சென்னை, அய்அய்.டி.,க்கு, 7.14 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளனர்.
தேசிய உயர்கல்வி நிறுவனமான, சென்னை அய்.அய்.டி.,யின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பங்களிப்பு நிகழ்ச்சி, இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், 1994ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், 7.14 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த நிதி, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மாணவர்களின் மன அழுத்தத்திற்கான தீர்வு வழங்குதல் மற்றும் பொறியியல் துறைகளின் முன்னேற்றத்துக்கு செலவிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஆராய்ச்சி இருக்கை அமைப்பதற்காக, 1967ம் ஆண்டு, முன்னாள் மாணவரான சுப்ரமணியம், 71.42 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இவர்களை, அய்அய்.டி., நிர்வாகம் கவுரவித்துள்ளது.
No comments:
Post a Comment