சென்னை, டிச 29 சென்னை சேத்துப் பட்டு எம்.சி.சி, பள்ளியில் பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரம் குறித்த மாபெரும் மாநாட்டில் புற்றுநோயை வென்ற நீரஜா மாலிக், தொழில்முனைவோர் சபரிநாயர், நிதேஷ் பண்டாரி, மற்றும் சென்னை பிரபலங்கள் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகிழ்ச்சியை ஏற்பாடு செய்த சைராபில்ஸ் மீடியா இயக்குநர் தீபக் தத்தார் ஜெயின் கூறுகையில் " சென்னையில் பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரம் குறித்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து அதில் 400 பெண் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கினோம். தமிழ் நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, புதுச்சேரி மாநிலங் களை சேர்ந்த 400 சாதனை பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்க பட்டது.
தொழில் துறை , பெண் உரிமைகள் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம், பெண் குழந்தைகள் மேம்பாடு, அறிவியல் மற்றும் தெழில்நுட்பம், இலக்கியம், ஊடகம் ஆகிய துறைகளில் விருது பெற்ற பெண்கள் சாதனை புரிந்து உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment