பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நெய்தல் இலக்கியத் திருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 29, 2019

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நெய்தல் இலக்கியத் திருவிழா


சென்னை, டிச. 29- நெய்தல் வாழ்க்கை சார்ந்த இலக்கியங்களை, விவாதிக்கும் ஒருநாள் விழாவாக நெய்தல் இலக்கியத் திருவிழா, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது


பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் 2,387 ஆவது நிகழ்ச்சி நெய்தல் இலக்கியம் சார்ந்த ஒருநாள் திருவிழாவாக, கடந்த 14.12.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்ச்சி அன்னை மணியம் மையார் அரங்கில், காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தொடக்கவிழாவைத் தொடர்ந்து, நூல் ஆய்வு அரங்கம், ஒக்கி அரங்கம், திரையிடல் அரங்கம், நூல்வெளியீடு மற்றும் நிறைவரங்கம் என்று பல்வேறு அரங் கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற்றது. நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து நெய்தல் நிலத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தொடக்கவிழா அரங்கம்!


நிகழ்வின் தொடக்கத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ச.சேரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் வழக்குரைஞருமான லிங்கன், நிகழ்வின் நோக்கம் குறித்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து நெய்தல் இலக்கியத் திருவிழாவைத் தொடங்கிவைத்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரை யாற்றினார். நிகழ்வின் முக்கிய பகுதியாக, எழுத்தாளர் குறும்பனை பெர்லின் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. அவர், நெய்தல் இலக்கியத் திருவிழா ஒருநாள் விழாவாக நடப்பது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று நெகிழ்வோடு குறிப்பிட்டு, ஏற்புரையாற்றினார்.


நூல் ஆய்வரங்கம்!


மதிய உணவுக்குப் பிறகு, இரையுமன் சாகரின் வேளாப்பாடு, கடிகை அருள் ராஜின் கடல்நீர் நடுவே, சப்திகாவின் கடலோடிக் கவிதைகள் ஆகிய புத்த கங்களைப்பற்றி தோழர்கள் புஷ்பராஜ், உடுமலை வடிவேல், கவிதா சொர்ண வல்லி, ரமணி ஆகியோர், அப்புத்தகங் களின் சாரத்தை ஆய்வுரைகளாக முன் வைத்து, புத்தகங்களை வாங்கிப் படித்து தெளிவுபெறும்படி பார்வையாளர்களை அறிவுறுத்தினர்.


இதற்காகவே மேற்கண்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இலக்கிய உலகில் அதிகம் விவாதிக்கப் படாத இந்த நிகழ்வு, நெய்தல் நில மக்க ளின் வாழ்க்கையை, மருதநில மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் வகையில் இருந்தது. இது இருநிலத்து மக்களிடமும் ஒரு நெகிழ்வை உண்டாக்கியது. நெய்தல் நில மக்களின் வாழ்க்கை பற்றி ஏதுமறி யாமல், புயல்வரும்போதும், மீனவர்கள் தாக்கப்படும்போது மட்டுமே நினைவு கூறும் மக்களுக்கு இந்நிகழ்ச்சி அவர்க ளின் அன்றாட வாழ்க்கை முறைகளை தெரிவிக்கும் ஒரு அரிய நிகழ்வாக அமைந்திருந்தது!


ஒக்கி அரங்கம்!


மதியம் பார்வையாளர்களுக்கு மதிய உணவோடு, நெய்தல் நிலத்து உணவும் சேர்த்து வழங்கப்பட்டது! அதற்குப் பிறகு, அருள் எழிலன் இயக்கிய, பெருங் கடல் வேட்டத்து எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆவணப்படம் இயக்கிய அருள் எழிலன், நெய்தல் இலக்கியத்திற் கென்று ஒருநாள் நிகழ்ச்சி நடத்துவது வரலாற்று சிறப்பு மிக்கது என்று பாராட்டிப் பேசினார். தான் இயக்கிய ஆவணப்படம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொ ண்டார். .அதைத் தொடர்ந்து அருள் எழிலன் எழுதிய இனப்படுகொலை என்கிறேன் நான், வழக்குரைஞர் லிங்கன் எழுதிய புயலைக்கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள் ஆகிய புத்தகங்களை இதழாளர் கோவி.லெனின், கவிதா கஜேந்திரன், ராஜசங்கீதன் ஆகியோர் இருநில மக்களிடையே உரையாடல் நிகழ்த்தினர்.


புத்தக வெளியீடும்!


 


நிறைவரங்கமும்!


நிறைவரங்கம் மாலை சரியாக 6 மணிக்குத் தொடங்கியது. இதில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர், கி.சத்தியநாராயணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கி உரையாற்றினார். நெய்தல் இலக்கிய எழுத்தாளர்கள் பற்றி இதழாளர் சுகுணா திவாகர் விரிவாகப் பேசினார். அதைத்தொடர்ந்து எழுத்தாளர் சாந்தகுமாரியின் பாட்டி யின் வெத்தலப்பெட்டி என்ற புத்தகத்தை எழுத்தாளர் இமையம் வெளியிட்டு சிறப்பானதோர் நிறைவுரை ஆற்றினார். புதிதாக எழுத வந்திருக்கும் சாந்தகுமாரி ஏற்புரை வழங்கினார். இறுதியாக ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி யுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.


கலந்து கொண்ட நெய்தல்,


மருதநிலத்து மக்கள்!


நிகழ்வில் மாநில அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வட சென்னை மாவட்டத் தலைவர் சு. குமாரதேவன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, அம்பத்தூர் முத்துக் கிருஷ்ணன், பொரியார் மாணாக்கன், பூவை செல்வி, கொரட்டூர் முத்தழகு, அய்சுவர்யா, கொடுங்கையூர் தங்கதன லட்சுமி, தங்கமணி,  அம்பத்தூர் ஆ,வெ, நடராஜன், ஆவடி வஜ்ரவேல், இதற்கா காவே கன்னியாகுமரியிலிருந்து வருகை தந்திருந்த நெய்தல்நில மக்கள், மற்றும் சென்னை ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பலரும் காலையிலிருந்து இரவு வரை காத்திருந்து நிகழ் வைக் கண்டுகளித்தனர். ஏற்பாடு செய்த வர்களைப் பாராட்டிச் சென்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment