சுற்றுப் பயணம் குமரி முதல் சென்னை வரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 29, 2019

சுற்றுப் பயணம் குமரி முதல் சென்னை வரை

தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லை.


+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அளிக்கப்பட்டு வந்தன.


இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை - எளிய மக்கள் மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர். பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு?


மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற கண்ணி வெடியைப் பதுக்கி வைத்திருந்தவர்கள் ஆயிற்றே.


தந்தை பெரியார் குரல் கொடுத்து, நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராமராய நிங்கர்) பிரதமராக இருந்தபோதுதான் அந்தச் சூழ்ச் சியைத் தவிடு பொடியாக்கினார்.


அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் டாக் டர்கள் ஆனார்கள்.  சுப்பன் எம்.பி.பி.எஸ்., குப்பன் எம்.டி. என்ற போர்டுகளைக் கண் குளிர பார்க்க முடிந்தது.


இதனை ஒழிக்க வேண்டும் என்பதுதான் உயர் ஜாதி பார்ப்பனப் பூணூல் கூட்டத்தின் பெருங் கனவாக இருந்து வந்தது.


பொருத்தமாக பிஜேபி ஆட்சி  மத்தியில் வந்தாலும் வந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டாலும் 'நீட்' தேர்வு உச்சநீதி மன்றத்தால் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது.


2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியோ, மறுசீராய்வு மனு போட்டு கெட்டிக் காரத்தனமாக 'நீட்'டுக்கு உயிரை உண்டாக்கி விட்டது.அதன் பலனை ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் பெருங் கொடுமை இப்பொழுது!


எந்த அளவு பாதிப்பு?


இந்தப் புள்ளி விவரத்தைப் படியுங்கள், படியுங்கள்!


2016ஆம் ஆண்டில்  'நீட்' தேர்வு இல்லாத நிலையில் +2 அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக் கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் கிடைத்த இடங் களையும், 2017 முதல் 'நீட்' வந்தபின் கிடைக்கப் பெற்ற இடங்களையும் கண்ணுள்ளவர்கள்  கொஞ்சம் கருத்தால் சிந்தித்துப் பார்க்கட்டும்!


2016ஆம் ஆண்டின் நிலை என்ன?


திறந்த போட்டி 884 இடங்களில்


பிற்படுத்தப்பட்டோர் - 599


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 159


முசுலிம் - 32


தாழ்த்தப்பட்டோர் -  23


மலைவாழ் மக்கள்  -  01


உயர்ஜாதி - 68


நீட் இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் - 30 'நீட்' வந்த பிறகு  - 5


2016இல் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள்


பெற்ற இடங்கள் - 62


நீட் வந்த பிறகு - 1220 (20 மடங்கு அதிகம்)


தமிழ் வழியில் படித்தவர் நீட்டுக்கு முன்


2015 - 2016 இல்  - 510 இடங்கள்


2016 - 2017இல் - 537 இடங்கள்


நீட் வந்த பிறகு


2017  - 2018 இல்  - 52


2018 - 2019இல்  - 106


பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரிகிறதா?


மருத்துவக் கல்லூரி கனவு கண்டு  'நீட்' என்னும் கொடுவாளால் தற்கொலைக்கு ஆளான அனிதா என்ற பெண் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எத்தனைத் தெரியுமா?


1200க்கு 1176 (கட் ஆஃப் மார்க் - 196.75)


(மருத்துவக் கல்லூரியில் சேரும் பாடங்களில்)


நீட் தேர்வில் பெற்றது வெறும் - 86.


அஸ்வத் பெற்ற மதிப்பெண் - 1171


 


கட்ஆப்  199- (25%)


 


'நீட்'டில் பெற்றது  -  270 (37%)


 


நிவாதனி - 1181


 


கட்ஆப்  -  199 (5%)


 


'நீட்'டில் - 337 -  கட்ஆப் - (46%)


 


ஆர். ஜனனி - 1182


 


கட்ஆப் -  198.5


 


'நீட்'டில்- 279 -  கட்ஆப் -  (38%)


 


நூமிளா -  1175


 


கட்ஆப் -  197.5 (88.5)


 


'நீட்'டில் - 203 (28%)


மதுவதனா -  1168


 


கட்ஆப் - 197.5


 


'நீட்'டில் - 278  (38%)


 


கிளாஷியா பிரகாஷ் - 1173


 


கட்ஆப் - 199.5 (99.75%)


 


'நீட்'டில் - 297 (41%)


 


மித்திலா -  1166


 


கட்ஆப் - 197 (98.5%)


 


'நீட்'டில் - 185 (25%)


 


ஆயிஸ் வாரியா - 1147


 


கட்ஆப்  - 196.5 (99.75%)


 


'நீட்'டில் - 207 (28%)


+2 தேர்வில் இவ்வளவு மதிப்பெண்களை இவர்கள் குவித்திருந்தாலும், நீட்டில் எவ்வளவுக் குறைவான  மதிப்பெண்கள் - இதன் சூழ்ச்சி புரிகிறதா?


மக்கள் மத்தியில் இவற்றை விளக்க வேண் டாமா?


ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரைப் பறித்த இந்த நீட்டை ஒழிக்க வேண்டாமா?


விழிப்புணர்வு ஊட்டவே தமிழர் தலைவர் குமரி முதல் சென்னை வரை சுற்றுப் பயணம் தொடருகிறார். ஜனவரி 20 முதல் 30 முடிய இந்த சமூகநீதி வரலாற்று சுற்றுப் பயணம். தோழர்களே, சிறப்பாகக் கூட்டங்களை ஏற்பாடு செய்வீர்! செய்வீர்!! இது நமது மகத்தான பணியல்லவா!


 


- கலி. பூங்குன்றன்


துணைத் தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


29.12.2019


No comments:

Post a Comment