வேலூர், டிச.29 இடைவிடாமல், அய்ந்து நிமிடம் சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைத்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' வேலுரைச் சேர்ந்த, 3 வயதுச் சிறுமி இடம் பிடித்திருக்கிறார்.
வேலூர், சத்துவாச்சாரி நேரு நகரைச் சேர்ந்தவர், விக்னேஷ்வர ராவ்; சிலம்ப மாஸ்டர். இவரது மனைவி, தீபலட்சுமி. இவர்களின், 3 வயது மகள் திவீசா, அங்குள்ள தனியார் பள்ளியில், எல்.கே.ஜி படித்து வருகிறார்.இந்த சிறுமிக்கு, 2 வயதிலிருந்தே, அவரது தந்தை, சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார். சிறுமியும் ஆர்வமுடன் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுற்றப் பழகிக்கொண்டார்.
பெரியவர்களுக்கு நிகராக, திவீசாவும் சிலம்பம் சுற்றுகிறார்.அவரது திறமையைக் கண்டு, பலரும் வியந்துபோயினர். 5 நிமிடம் இடை விடாமல், திவீஷா ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, மான்கொம்பு சுற்றுவதை, 'காணொளி' எடுத்து, 'இந்தியா புக் ஆப் ரெக் கார்ட்ஸ்' அமைப்புக்கு, அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.அந்த அமைப்பினர், சிறுமியின் திறமையை பாராட்டி, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
மேலும், சாதனையாளராக திவீசாவை அங்கீகரித்து, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தமைக்கான அடையாள அட்டை யையும் வழங்கிக் கவுரவித்தனர்.இதுதொடர் பாக, விக்னேஷ்வர ராவ் கூறியதாவது: சத்துவாச்சாரியில், 1938ஆம் ஆண்டு, சிலம்பம் பயிற்சி பள்ளியை, என் மூதாதையர் துவங்கினர். நான், அய்ந்தாவது தலைமுறை யாக, சிலம்பம் கற்றுத்தருகிறேன்.இது, தமிழர் களின் பாரம்பரிய வீர விளையாட்டு. 3 வயது குழந்தைகள் முதல், 70 வயதுடைய முதியோர் வரை பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். இதைப் பார்த்த, என் மகள் திவீசாவும் ஆர்வமுடன் சிலம்பம் கற்றுக்கொண்டாள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment