Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மதமும் - தீண்டாமையும்
உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவகாருண்யத்தையும், எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய, அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதன்று.     (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
January 02, 2023 • Viduthalai
தகுதி - திறமை ஒரு சூழ்ச்சி
அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத்  தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க, அழுத்த, கீழ்த்தரமாக செய்யப்படும் சூழ்ச்சி -த…
December 31, 2022 • Viduthalai
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும்.   'குடிஅரசு' 26.2.1944
December 30, 2022 • Viduthalai
கடவுளின் அயோக்கியத்தனம்
பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜன சமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவும், கிரிமினல் குற்றமுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு இது மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும்.  (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)
December 29, 2022 • Viduthalai
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.   'குடிஅரசு' 3.11.1929
December 28, 2022 • Viduthalai
மனிதன் யார்?
தன்னலத்தையும், தன் மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான்.     'குடிஅரசு' 14.4.1945
December 27, 2022 • Viduthalai
தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது    'குடிஅரசு' 3.11.1929
December 24, 2022 • Viduthalai
மேலான ஆட்சி
தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது.        'குடிஅரசு' 3.11.1929
December 23, 2022 • Viduthalai
மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால், அ…
December 22, 2022 • Viduthalai
எது சரியான வழி?
சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்?       'குடிஅரசு' 14.7.1945
December 21, 2022 • Viduthalai
இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று.         (பெரியார் 99ஆவது விடுதலை  பிறந்த நாள் மலர், பக்.30)
December 20, 2022 • Viduthalai
பேத உணர்ச்சி
பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள். 'விடுதலை' 19.1.1948
December 19, 2022 • Viduthalai
மதக்குறி என்பது மாட்டுக் குறியே!
மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவனால் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.        'குடிஅரசு' 3.11.1929
December 17, 2022 • Viduthalai
முட்டாளும் அறிவாளியும்
முட்டாள்தனம் என்றாலேயே சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும் வஸ்து என்று சொல்லலாம். அறிவு என்றால் சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்க முடியாத வஸ்து என்பது பொருள். 'விடுதலை' 17.5.1961
December 15, 2022 • Viduthalai
எப்படிப்பட்ட சட்டம் தேவை?
மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கே ஒப்பாகும்.        'குடிஅரசு' 3.11.1929
December 14, 2022 • Viduthalai
நம்பாதவன் நாத்திகனாம்
இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் "நம்பாதவன் நாத்திகன்" என்பதுவே.          'குடிஅரசு' 3.11.1929
December 13, 2022 • Viduthalai
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? 'குடிஅரசு' 7.4.1929
December 12, 2022 • Viduthalai
மெய்ஞ்ஞானம் - அஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று  பார்த்தால், மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவுமே இருப்பான் என்பதுதான். கவலை என்பதன் பொருள் பேத நிலை. கவலையற்ற என்பதன் பொருள் பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.           (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், …
December 10, 2022 • Viduthalai
மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால், அ…
December 09, 2022 • Viduthalai
நம்பாதவன் நாத்திகனாம்
இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் "நம்பாதவன் நாத்திகன்" என்பதுவே.          'குடிஅரசு' 3.11.1929
December 08, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn