ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்களிப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பி.ஜே.பி. அதிர்ச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்களிப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பி.ஜே.பி. அதிர்ச்சி!

featured image

ராஞ்சி, ஜூலை 10- ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.

பிணையில் விடுதலை

ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியிலிருந்து விலகி னார். எனவே அவரது அரசில் அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சரானார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் கடந்த 28ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். எனவே அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க கட்சியினரும், கூட்டணி தலைவர்களும் விரும்பினர்.
இதற்கு வசதியாக முதலமைச்சர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் தனது பதவியிலிருந்து விலகினார்.

முதலமைச்சராக பதவியேற்பு

இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டின் 13ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் கடந்த 4ஆம் தேதி பதவி யேற்றார்.
அத்துடன் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபிக்கும் நோக்கில் 8.7.2024 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது எதிர்க் கட்சியான பா.ஜனதாவை அவர் கடுமையாக சாடினார்.
தன்னை மீண்டும் சட்ட மன்றத்தில் பார்த்தவுடன் பா.ஜன தாவினரின் செயல்பாடுகள் வித்தி யாசமாக இருப்பதாக அவர் கூறினார். மாநிலத்துக்கு என்று பா.ஜனதா வினரிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை என்றும் குறை கூறினார்.

பின்னர் இந்த தீர்மானம் மீது வாக் கெடுப்பு நடந்தது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப் பினர்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் அரசுக்கு ஆதரவாக வாக் களித்தனர்.

81 உறுப்பினர்

ஜார்கண்ட் சட்டமன்றத்தில் தற் போதைய உறுப்பினர் எண்ணிக்கை 76 ஆகும். இதில் 45 உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் அரசை ஆதரித்து வாக்களித்தனர். இதன் மூலம் அவரது அரசு வெற்றி பெற்றது.

பா. ஜனதா குற்றச்சாட்டு

அதேநேரம் பா.ஜனதா தலைமை யிலான எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக இந்த தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் அமர் பவுரி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் ஆளும் கூட் டணி நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 5 வெற்றி பெற்றபின் பேசிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தன்னை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பேரவைத் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆளும் கட்சியின் ஒற்றுமை மற்றும் பலத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தி ருப்பதாக தெரிவித்த அவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே கூட்டணி அரசு வலிமையாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

அமைச்சராக பதவியேற்ற
சம்பாய் சோரன்

ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நடந்தது.

இதில் மேனாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் அமைச்சராக பதவியேற்றார். அவருடன் மேலும் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment