பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

featured image

கொரட்டூர், மே 23- பெரியார், அண்ணா, ‌கலைஞர் பகுத்தறிவு பாச றையின் 421 ஆவது வார நிகழ்வு 19.5.2024 மாலை 6 மணிக்கு முதல் நிகழ்வாக பாடி பிரிட்டானியா எதிரில் குடிநீர் பந்தல் 6 ஆம் ஆண்டு திறப்பு விழாவை முன் னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பா.தென்னரசு திறந்து வைக்க 84 ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் இனிப்பு வழங் கினார்.
இரண்டாவது நிகழ்வாக இரவு 7.30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்க ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செய லாளர் எ.கண்ணன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் குடிஅரசு, சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் தமிழவேள் உமாமகேசுவரன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்தினை அவரது பெயரன் முனைவர் த.கு.திவாகரன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் கு.சங்கர், சரவணன், மீன் குமார், பாடி சுரேஷ், பழனி, பகலவன், திராவிடப்பரிதி, டைசன், லோகேஷ், சிறீதரன், உதயசூரியா, கெஜலட்சுமி, த.வ.குட்டி, அறிவு வழி தாமோதரன், ராஜா, பிச்சை மணி, கருப்பசாமி, ஆறுமுகம், அருமை நாதன், மணி சுமதி, சிவராமன், வழக் குரைஞர் பன்னீர்செல்வம், விஜய பானு, கிரண்சாய்,புஷ்பா, அருள் விழியன், ஆரோக்கியசாமி, செல்வ குமார் ஆகியோர் கலந்து கொண் டனர். நிறைவாக கழக காப்பாளர் பா.தென்னரசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment