யாருக்கு வாக்களிக்க உத்தேசம்? - கருஞ்சட்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

யாருக்கு வாக்களிக்க உத்தேசம்? - கருஞ்சட்டை

featured image

காஞ்சி மடத்துக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள மடத்தில் நடந்தது என்ன? இதோ அந்தச் செய்தி:

பத்திரிகை செய்தி

17.3.2024 அன்று சேலம் மாநகர், மரவனேரி சிறீ காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட தமிழ் நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர் வாகக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:

வரப்போகும் நமது இந்திய திருநாட்டின் நாடாளு மன்றத் தேர்தலில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச் சியை கருத்தில் கொண்டு சனாதன தர்மத்தை காத்திட நம் பாரதப் பிரதமர் சிறீமான் நரேந்திர மோடி அவர்களை மூன்றாம் முறையாக பாரத பிரதமராக பதவியேற்க தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய இச்சங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும், இது தமிழக சட்டசபை தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல் என்பதால் உள்ளூர் பிரச்சி னைகளை கருத்தில் கொள்ளாமல், தேசிய கண்ணோட் டத்தில் இந்து விரோதிகளுக்கு மற்றும் பிராமண துவேஷிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க, நம் வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்க, நம் சமூகத்தின்மீது நட்பாக மற்றும் ஆதரவாக உள்ள பி.ஜே.பி. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாய் இச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.
CGV கணேசன், மாநில தலைவர் சென்னை – 28

பார்ப்பனர்களை இன்றைக்கும் விமர்சிக்கிறீர்களே! கருப்புச் சட்டைக்காரர்களுக்கு வேறு வேலையில் லையா? என்று மே(ல்) தாவியாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கிற அதிகப் பிரசங்கிகள் உண்டு.
அந்தப் பேர்வழிகள் – பார்ப்பன சங்கத்தின் கூட்டத்தையும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தையும் கண்களைக் கழுவிக் கொண்டு பார்க்கவும்.
பார்ப்பனர்களின் சமூகப் பார்வையும், ஆரியப் பார்வையும் எத்தகைய கழுகுத் தன்மை கொண் டது என்பதை ஒரே நொடியில் தெரிந்து கொள் ளலாம்.
ஸநாதன தர்மத்தைக் காக்க வேண்டுமாம். ஸநாதனம் என்பதற்குக் காஞ்சி சங்கராச்சாரியார் கொடுத்த விளக்கம் – வருணாசிரமம் என்பதுதான் (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம், பக்கம் 282)

வருணாசிரமதர்மம் என்றால் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன், காலிலிருந்து பிறந் தவன் சூத்திரன் என்பதுதானே! சூத்திரன் என்றால் ஏழு வகைப்படுவான்; அதில் ஒன்று விபச்சாரி மகன் என்ப தாகும் (மனுதர்மம் அத்தியாயம் 8 – சுலோகம் – 415).

பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் (மனுதர்மம் அத் தியாயம் 9 – சுலோகம் 19).
இந்த 2024லும் நாம் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இந்த ஸநாதன தர்மத்தைக் காப்பாற்றிட பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டுமாம் – சொல்லுகிறது பிராமணர் சங்கம்.
நம்மை சூத்திரர்கள் என்று சொல்பவர்கள் துவேஷிகள் அல்லவாம்! ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்று சுயமரியாதைக் குரல் கொடுப் பவர்கள் துவேஷிகளாம்!
எப்படி இருக்கிறது யோக்கியதை?

ஒன்றைக் கவனித்தீர்களா? இந்தப் பிராமண சங்கக் கூட்டம் நடந்த இடம் சங்கர மடம்!
சங்கர மடம் என்றால் யாருக்கானது என்பது இப்பொழுது புரிகிறதா?

தோழர்களே நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் – நூற்றுக்கு 97 விழுக்காடான மக்களை தலை யெடுக்க விடாமல் தரை மட்டமாக்குவதுதான் – அதுதான் பிஜேபி சங்பரிவார், பிராமணர் சங்கத்தின் நிலைப்பாடு!

இதனை முறியடிக்க ‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்! விஷ வாயுக் கூட்டத்தின் வாலை ஒட்ட நறுக்குவீர்!!

No comments:

Post a Comment