பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) -- உலக மகளிர் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) -- உலக மகளிர் நாள்

featured image

வல்லம், மார்ச் 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகளி ருக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோயிற்கான பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புற்றுநோய் கண்டறிதல் சோத னையான மேமோக்ராம் மற்றும் பேப்ஸ்மியர் எனப்படும் உயர்தர சோதனை முகாம் டாக்டர் விஸ் வநாதன் மருத்துவமனைகள் குழு மம் மற்றும் டாக்டர் சாந்தா புற்றுநோய் அறக்கட்டளை நிறு வனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
மருத்துவர் ராதிகா மைக்கேல் (இயக்குநர், எம்.ஆர்.மருத்துவ மனை) சிறப்புரை ஆற்றினார். வல்லம் பேரூராட்சி மன்ற தலை வர் திருமதி க.செல்வராணி நிகழ் வினை தொடங்கி வைத்து சிறப் புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து மருத்து வர் ராதிகா மைக்கேல் புற்று நோய் தொற்றின் அறிகுறிகள், சுயபரி சோதனை முறைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி விளக்கமாக கூறினார்.
இறுதியில் ஒரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இத்தகைய முகாம் ஏற்பாடு செய்வது சிறப் பான செயல் என்றும், பெரியார் மணியம்மை நிறுவனம் எப்பொழு தும் ஒரு முன்னோடியாக இருப்ப தாக வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிழ்ச்சி பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா முன்னிலையில் நடைபெற்றது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் முனை வர் ச.நர்மதா நன்றி கூறினார். வீரமணி _ மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குநர் முனைவர் அ.அசோக்குமார் அனைத்து நிகழ்வினையும் தொகுத்து ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment