ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

featured image

சென்னை,மார்ச் 7– தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ளிஹிஜிலிளிளிரி ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அப்போது அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப் பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?
பதில்:-கோவிட் இரண்டாவது பேரலை என்கிற மிக நெருக்கடி யான காலக்கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழக அரசு பொறுப் பேற்றது. மக்களின் உயிரைக்காக்க வேண்டிய மிக சவாலான பணி எங்கள் முன் இருந்தது. அனைத் தையும் சமாளித்து, மீண்டு மக்க ளின் இயல்பு வாழ்க்கையை மீட் டோம்.
அதுபோல தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியும், அரசின் நிதி நிலைமையும் படுபாதாளத்திற்கு போயிருந்தது. தமிழ்நாட்டின் அடிப் படைக்கட்டமைப்பே சீரழிந்திருந்தது. இந்த நிலைமைகளை மாற்றி, தமிழ் நாடு மீண்டும் முதன்மை மாநிலமாக வேண்டும் என்கிற எங்கள் லட்சிய மும் இலக்கும் சவால்களுடனே யேதான் தொடங்கின. அந்த சவால் களை எதிர்கொண்டு இன்று பல சாதனைகளுக்கு உரிமை கொண்டா டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

கேள்வி:- கடந்த மூன்றாண்டுக ளில் உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?
பதில்: பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களை தமிழ்நாடு பெற்றுள் ளது.
மருத்துவக்கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவ தலைநகர்’ என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல கட்டங்கள் முன் னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்தியா வில் மொத்தமாக பணிபுரியும் பெண் களின் எண்ணிக்கையில் தமிழ்நாட் டின் பங்கு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது.
குனிந்து தேட வேண்டிய அள வில் இருந்த தமிழ்நாட்டின் முன் னேற்றத்தை மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அள வுக்கு உயர்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
திராவிட மாடல் என்பது வேறெந்த மாடலுடனும் ஒப்பிட இயலாத தனித்துவமான முன் மாதிரியாகும். ‘எல்லோருக்கும் எல் லாம்’ என்பதுதான் திராவிட மாடலுக்கு எளிமையான விளக் கம்!

கேள்வி:- ஜி.எஸ்.டி. நடைமுறை மற்றும் நிதிப்பகிர்வால் உள்ள நெருக்கடிக்கு இடையே எப்படி திட் டங்களைத்தீட்டி செயல்படுத்து கிறீர்கள்?
பதில்:- புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பேரிடரை எதிர் கொண்ட நிலையில், பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் பேரிடர் நிவாரண நிதியை இதுவரை வழங்கவில்லை.
மிகக்கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கமின்றி செயல்படுகிறோம்.
மாநில அரசுக்கு கிடைக்கக்கூடிய பத்திரப்பதிவு துறை வருவாய், வாகன பதிவு வருவாய், புதிய முதலீடு கள் உள்ளிட்டவற்றை கொண்டு திட்டங்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றையும் கவனித்து செயல்படுத்துகிறோம்.

கேள்வி:- நீங்களும் உங்கள் திரா விட முன்னேற்றக் கழகமும் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின் மய்ய மாக இருக்கிறீர்கள். எத்தகைய சவால்கள் உங்கள் முன் உள்ளன?
பதில்:- இந்தியா கூட்டணியின் தொடக்க கூட்டத்திலேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சி களை கருத்திற்கொண்டு தொகுதிப் பங்கீட்டினை மேற்கொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தினேன்.
நிதிஷ்குமார் அவர்கள் சொந்த காரணங்களை கருதி வெளியேறினா லும் அவருடைய பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப் பதுடன், அங்கே தொகுதிப்பங்கீடும் சுமூகமான முறையில் நடந்து வருகி றது. அதுபோலவே வாய்ப்புள்ள இடங்களில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தங்களுக்குரிய பங்குடன் செயல்படுகின்றன. தேர் தல் களம் என்று வருகிறபோது ஒரு சில சவால்கள் எல்லாத்தரப்புக்கும் இருக்கும். மக்கள் மனங்களை வெல் வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை.

கேள்வி:- ஆளுநர் போடும் முட் டுக் கட்டைகளை மீறி தமிழ்நாடு எப்படி தனது அரசியல் கனவுகளை நனவாக்குகிறது?
பதில்:- மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்தை மீறிய அதி காரம், நியமன பதவியான ஆளுநர் களுக்கு கிடையாது என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அண்மைக் காலமாக வெளிப்படையான அரசியல்வாதி களைப்போல ஆளுநர்கள் செயல் படுவதை தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காண்கிறோம்.
ஆளுநரின் அதிகார வரம்பு மீறல்களை சட்டமன்றத்தில் எதிர் கொண்டு முறியடித்தோம். நீதிமன் றத்திலும் சட்டவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அரசமைப்புச் சட்டத்தை மதிக் காமல், ஜனநாயகத்தின் மாண்பு களை கெடுக்கும் வகையில் ஆளுநர் களை வைத்து இணை அரசாங்கம் நடத்த முற்படும் பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

கேள்வி:- மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?
பதில்:- ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டி கொள்ள முடியாது. பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம் மதியாக இல்லை. யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண் டும் யார் வந்துவிடக்கூடாது என் பதில் மக்கள் தெளிவாக இருக் கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

கேள்வி:- தேசிய அளவில் நீங்கள் கூட்டணியை கட்டமைப்பதால் தான் பா.ஜனதா அரசு உங்களை குறி வைக்கிறது என கருதுகிறீர்களா?
பதில்:- எதிர்ப்புகளோ, தாக்குதல் களோ எனக்கோ தி.மு.க.வுக்கோ புதிதல்ல. எப்போதெல்லாம் ஜனநா யகத்திற்கு ஆபத்து நேர்கிறதோ அப்போது எதிர்ப்பு குரல் கொடுக் கும் இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்றக்கழகம்.
ஆதரிக்க வேண்டிய நல்லவற்றை ஆதரிப்பதிலும் உறுதியாக இருப் பேன். எதிர்க்க வேண்டிய தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப் பேன். -இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment