இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238, அஜ்மர் 228, திருவனந்தபுரம் 70 உட்பட 5696 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசி நாள்: 19.2.2024
விவரங்களுக்கு: rrbchennai.gov.in

No comments:

Post a Comment