பிரான்சு நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

பிரான்சு நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாரிஸ்,ஜன.31- அமெரிக்காவில் பெண்களின் கருக் கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண் களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார்.
அதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்சு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment