சிவகங்கையில் தந்தை பெரியார் முழு உருவ சிலை அமைக்க நகர் மன்றத்துக்கு கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

சிவகங்கையில் தந்தை பெரியார் முழு உருவ சிலை அமைக்க நகர் மன்றத்துக்கு கோரிக்கை

மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

சிவகங்கை, நவ. 28- சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர்  இரா. புகழேந்தி அவர்களின் "யாழகம்" இல்லத்தில் 26.11.2023 காலை 10 மணிக்கு  தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலை மையில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் சிவ கங்கை மாவட்ட தலை வர் இரா.புகழேந்தி, மாவட் டக் காப்பாளர் வழக்கு ரைஞர் ச. இன்பலாதன், மாவட்ட அமைப்பாளர் ச. அனந்தவேல், மாவட்ட துணைச் செயலாளர் கவி ஞர் தங்கராசு, பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் செயராமன், திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் பிரமனூர் குமார், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இராசாங்கம், மாவட்டச் செயலாளர் கவிஞர் கணேசன், பகுத்த றிவாளர் கழகப் பொறுப் பாளர் நடராசன் ஆகி யோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கலந்துரையாடல் கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப் பாளரும், பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை  சந்திரன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், தகைசால் தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாவது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் பரிசாக அதி கமான விடுதலை சந்தாக் களை சேகரிக்க வேண்டும் என்றும், சிவகங்கை நக ரில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர் களின் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்று சிவகங்கை நகர் மன்றத் தலைவர் அவர்க ளிடம் கோரிக்கை வைத்து, நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழ்நாடு அர சிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், எதிர் கால இயக்க நடவடிக்கை கள் குறித்தும், ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

இறுதியாக மாவட் டத் தலைவர் இரா. புக ழேந்தி நன்றி கூறினார்.

சிவகங்கை நகர் மன் றத் தலைவரும், தி.மு.க. நகர கழக செயலாளர் சி.எம். துரை ஆனந்த் மற் றும் தி.மு.க தெற்கு ஒன் றியச் செயலாளர் ஜெய ராமனின் மூத்த சகோதரர் கிருஷ்ணன் மறைவிற்கு சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கப்பட் டது.

No comments:

Post a Comment