பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

காரைக்குடி, நவ. 28- காரைக் குடி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 26.11.2023 ஞாயிறு மாலை 5 மணி அளவில் குறள் அரங்கில் மாவட்டத் தலைவர்  ம.கு வைகறை தலைமையில், தலைமைக் கழக அமைப் பாளர் கா.மா சிகாமணி முன்னிலையில் நடை பெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக தமி ழர்களின் கேடயமான விடுதலை சந்தாவை அதிகமாக வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட செயலாளர் சி. செல்வ மணி, மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனி வேல், கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, நகர அமைப்பாளர் ஆ. பால்கி, தேவகோட்டை ஒன்றிய ப.க. செயலாளர் சிவ தில்லை ராசா, பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன்தாஸ், மாணவர் கழகத் தோழர் பிரவீன் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பொதுவு டைமைப் போராளி தோழர் சங்கரய்யா, பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை சந்திரன், சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் துணைவியார் முனியம் மாள் ஆகியோர் மறை விற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாவை வழங்குவதென வும், மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது எனவும், உறுப்பினர் சேர்க்கையில் தோழர்கள் முன்னெடுப்போடு பணி செய்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.

No comments:

Post a Comment