பெரியார் பிஞ்சு ஈரோடு தண்மதியின் அறிவியல் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பெரியார் பிஞ்சு ஈரோடு தண்மதியின் அறிவியல் கண்டுபிடிப்பு

திருச்சி, நவ. 30- 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் 25, 26.11.2023 ஆகிய இரண்டு நாள் நடை பெற்றது. 

அதில் கலந்துகொண்ட ஈரோடு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ந.பூ.தண்மதி -8ஆம் வகுப்பு மாணவி" பவானி ஆற்று நீரை ஆகாயத்தாமரையிடமிருந்து மீட்டல்" என்ற கருத்தை உள்வாங்கிWater Hycinth Collecting boat  உருவாக்கி தமிழ்நாடு அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்து இந்தியா அள வில் நடக் கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்ச்சி பெற்றுள் ளார். இவரிடம் கேட்ட கேள் விகளுக்கு பதில் அளிக்கையில் " நான் 5 முறை வல்லம் குழந்தைகள் பழகு முகாம் பயிற் சியில் கலந்துகொண்டேன். வகுப்பெ டுத்த ஆசிரியர்களால் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு இக் கருவியை எனது அறிவியல் ஆசிரியரின் துணையோடு உருவாக்கினேன்" என் றார். 

இவரது தந்தை து. நல்லசிவம் மாவட்ட கழக துணைத் தலைவர், தாய் பூங்கொடி மகளிர் பாசறை பொறுப்பா ளர், இளம் விஞ்ஞானி பெரியார் பிஞ்சு தண்மதியை அழைத்து அவருக்கு பய னாடையும், இயக்க புத்தகம் வழங்கிச் சிறப்பித்தார் தலைமைக்கழக அமைப் பாளர் ஈரோடு த.சண்முகம், உடன்: சட்டக்கல்லூரி மாணவி கண்ணம்மா.

No comments:

Post a Comment