விருதை வாங்கமாட்டேன் இலக்கிய விருது பெயர் அறிவிக்கப்பட்ட பழங்குடியின எழுத்தாளர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

விருதை வாங்கமாட்டேன் இலக்கிய விருது பெயர் அறிவிக்கப்பட்ட பழங்குடியின எழுத்தாளர் அறிவிப்பு

புதுடில்லி, நவ 27- பழங்குடி சமுதாயத் தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும் பத்திரிகையாளருமான ஜெசின்டா கெர்கேட்டா ‘இந் தியா டுடே' குழுமத்தால் அறிவிக் கப்பட்ட இலக்கிய விருதை ஏற்க மறுத்துள்ளார் 

இந்தியா டுடே குழுமத்தால் 'ஆஜ் தக் சாஹித்யா ஜக்ரிதி உதயமன் பிரதிபா சம்மன்' (Aaj Tak Sahitya Jagriti Udyman Pratibha Samman) எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டுவருகிறது. 

2022 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட ஜெசின்டா கெர்கேட்டா வின் 'ஈஸ்வர் அவுர் பசார்' எனும் புத்தகம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதோடு 50,000 ரூபாய் பரிசும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், இந்த விருதை ஏற்க ஜெசின்டா மறுத்து விட்டார்.

இதற்குக் காரணமாக, மணிப் பூர் பழங்குடியினரின் உயிருக்கு ஊடகங்கள் மரியாதையும் முக் கியத்துவமும் அளிக்காமல் விட்ட தாகக் கூறியுள்ளார். மணிப்பூர் மக்கள் தங்கள் உயிருக்கான மரி யாதையை இழந்துகொண்டிருந்த போது முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அலட்சியமாக நடந்து கொண்டன எனக் குற்றம் சாட்டி யுள்ளார். 

மேலும், இதுவரை எந்த ஊட கமும் பழங்குடி மக்களின் துயரங் களை மரியாதையான முறையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த தில்லை எனக் கூறியுள்ளார்.  "மணிப்பூர் மற்றும் மத்திய  இந்தியா வில் உள்ள பழங்குடியின மக்களின் உயிருக்கு மரி யாதை மறுக்கப்படும்போதும் மற்ற சமு தாயத்தைச் சேர்ந்த மக்களும் குழந் தைகளும் தொடர் தாக் குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் போதும், எந்த ஒரு விருதாலும் ஒரு கவிஞனையோ எழுத்தாள னையோ மகிழ்விக்க முடியாது" எனத் தனது எக்ஸ் பக்கத்தில் கெர்கேட்டா பதிவிட்டுள்ளார்.  

இந்த விருதுக்குத் தேர்வான 'ஈஸ்வர் அவுர் பசார்' எனும் அவரது புத்தகம் பழங்குடியின மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. விருது வழங் கும் விழா டில்லியில் நவ.26 அன்று நடைபெறும் எனஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது  

இந்தியா டுடே நிர்வாகிகள் அவரது முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்  பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின் பல படைப்புகள் அயல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment