திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

திருவாரூரில் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மானமிகு  திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல். சுப்ரமணியன்  அவர்கள் (வயது 88) நேற்றிரவு  (30.10.2023) காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

துவக்கத்தில் திராவிடர் கழகத்தில் தீவிர கொள்கைப் பற்றாளராக இருந்து பிறகு தி.மு.க.வில் இணைந்தார்.

நூற்றாண்டு  விழா நாயகர் கலைஞர் அவர்களிடமும் - இன்றைய தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் - அதே போல தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் நம் போன்ற தோழர்களிடமும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். தி.க., தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதற்கேற்ப அவரது இயக்க நடவடிக்கைகள் உடல் நலம் குன்றும் வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமான இழப்பு அல்ல; தி.க., தி.மு.க. இரண்டு இயக்கங்களுக்கும் பெரும் இழப்பு ஆகும்.

 சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த அவரை வீட்டிற்குச் சென்று பார்த்து நலம் விசாரித்து திரும்பினேன் சில மாதங்களுக்கு முன்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னமான பெரியார் அறக்கட்டளையின் தலைவர் அய்யா பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் இவரது சம்பந்தியாவர்.

அவரை இழந்து வருந்தும் அவரது குடும்ப உறுப்பினர்களான, மகன் ஸி.றி.ஷி. சங்கர், மகள்கள் தமிழ்ச்செல்வி, வனிதா, சாந்தி மற்றும் அவரது சம்பந்தி குறிப்பாக பொத்தனூர் க. சண்முகம் முதலிய அனைவருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்ளுவதுடன், நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மகன் திரு. சங்கர் அவர்களிடமும், பொத்தனூர் சண்முகம் அய்யாவிடமும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தோம். 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment