'நீட்' தேர்வால் தொடரும் அவல நிலை! தேசிய மருத்துவ ஆணைய கெடுபிடியால் 600 மாணவர்கள் பாதிப்பு வீணாகும் 2000 எம்.பி.பி.எஸ். இடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

'நீட்' தேர்வால் தொடரும் அவல நிலை! தேசிய மருத்துவ ஆணைய கெடுபிடியால் 600 மாணவர்கள் பாதிப்பு வீணாகும் 2000 எம்.பி.பி.எஸ். இடங்கள்

சென்னை,அக்.22- தேசிய மருத் துவ ஆணையத்தின் கெடுபிடியால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 600 எம்பிபிஎஸ் மாண வர்கள், தங்களது சேர்க்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே சேர்ந்த கல்லூரி களிலிருந்து வெளியேறி எம்பிபிஎஸ் சேர்ந்து, தற்போது அது வும் இல்லாமல் ஆகி, ஒட்டு மொத்தமாக அவர்களது எதிர் காலமே கேள்விக் குறியாகி விட்டது.

இதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே நிரப்பாமல் வைத் திருக்கும் 1500 எம்பிபிஎஸ் இடங்களுடன் சேர்த்து கிட்டத் தட்ட 2000 எம்பிபிஎஸ் இடங் கள் இந்த ஆண்டு வீணாகும் மிகக் கொடிய நிலை ஏற்பட்டி ருக்கிறது.

ஒரே ஒரு எம்பிபிஎஸ் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் களும், நீட் பயிற்சியின்போதே மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர் களும் ஒருபுறமிருக்க, ஒன்றல்ல, இரண்டல்ல... கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமாக எம்பிபிஎஸ் இடங்கள் வீணாகிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

நிகழாண்டில் பிறப்பிக்கப் பட்ட வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றாமல், செப்டம் பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல் லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்திருந்தது. 

இது தொடர்பாக என்.எம்.சி.யின் இளநிலை மருத் துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பில், நிகழாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க் கையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண் டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியி ருந்தது.

ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் என்.எம்.சி விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் புறம் பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, என்எம்சி அறிவுறுத் தலை மீறி நடத்தப்பட்ட கலந் தாய்வு செல்லாது என்றும், ஒரு வேளை மாணவர்களை கல்லூரி களில் சேர்த்திருந்தால் அவர் களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

ஒருவேளை ஒன்றிய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, காலக் கெடுவை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலொழிய தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த உத்தரவால், சுமார் 2000க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அய்ந்தரை ஆண்டு காலத்துக்கும் காலியாகவே இருக்கும் அபாயம் உள்ளது.

ஒன்றிய அரசு, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசு கள் அனைத்தையும் கலந்தாலோ சனை நடத்திய பிறகு, 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சேர்க்கை இடங் கள் காலியாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கலந்தாய் வுக்கான காலக்கெடுவை நீட் டிக்கக் கூடாது எனறு உத்தர விட்டிருந்தது. 

ஆனால், மகாராட்டிரம், பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அக் டோபரில் கலந்தாய்வு நடத்தி காலியாக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அடிப்படை யில் தேசிய மருத்துவ ஆணையம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் பங் கேற்ற பல மாணவர்கள், மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே சேர்க்கை பெற்று, மருத்துவக் கல்வியில் சேர்க்கை கிடைக்கிறதே என்பதற்காக ஏற்கெனவே சேர்ந்த என்அய்டி போன்ற கல்லூரிகளில் இருந்து விலகி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாகவும், தற்போது மருத் துவ  மாணவர் சேர்க்கையும் செல்லாது என்று அறிவித்திருப் பதால், கலை அறிவியல் கல்லூரி களில் கூட மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால், 600 மாண வர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக மாணவர் களும் பெற்றோரும் கலங்கி நிற்கிறார்கள்.

No comments:

Post a Comment