ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புதுடில்லி, அக்.22- பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி யின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த தால் ராகுல் காந்தி மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆக்கப்பட் டார். 

அதை எதிர்த்து வழக் குரைஞர் அசோக் பாண்டே என்பவர் என்பவர்  உச்சநீதிமன்றம் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் எந்த அடிப் படை உரிமையும் மீறப்படாத நிலையில் இந்த மனு, சட்ட நடை முறையை தவறாக பயன்படுத்த முயற்சிப் பதாக இருக்கிறது என்று கூறி, தள்ளுபடி செய்தது. 

மேலும் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராத மும் விதித்து உத்தரவிடப்பட்டது.


No comments:

Post a Comment