50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை!

புதுடில்லி,அக்.22- நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த் குமார் ஆகியோர் நாடு முழுவதும் நிலு வையில் இருக்கும் வழக்குகள் குறித்து வேதனையை வெளிப்படுத்தினர்.

பல நீதிமன்றங்களில் 50 ஆண்டுக ளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன. இதை நாங்கள் வேதனையுடன் கூறுகிறோம். உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, மேற்குவங்கத் தில் சில வழக்குகள் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 

சட்ட செயல்முறை நத்தை வேகத் தில் நகர்ந்தால் மனுதாரர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அதனால் நீதித்துறை யின் மீதான நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க 11 அம்சங்கள் கொண்ட விரிவான வழிகாட்டு நெறி முறை வெளியிடப்படுகிறது. நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வழக்குரைஞர் அமைப்புகள் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர். 

அய்ந்து ஆண்டுக ளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விரைவான விசாரணையை உறுதிசெய் யவும், தீர்ப்பைக் கண்காணிக்கவும் உயர் நீதிமன்றங்க ளுக்கு 11 அம்சங்கள் கொண்ட வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட் டுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கண்காணிக்கும் குழுக்களை அமைக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும்.

No comments:

Post a Comment