இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு பிரியங்கா காந்தி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு பிரியங்கா காந்தி கண்டனம்

சிம்லா, செப். 14 இமாசலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிடுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக இமாசலப் பிரதேசம் சென்றார். கடந்த 12 ஆம் தேதி பிரியங்கா காந்தி  குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்தார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும் பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி இங்கு சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோவிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதியை பிரியங்கா காந்தி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பிரியங்கா காந்தி கூறும் போது, இமாசலப் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும். இமாசலப் பிரதேச நெருக் கடியை தேசிய பேரிடராக அறிவிக்க வேண் டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் மாண்டியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீபா சிங் எழுப்புவார் என கூறினார். 

மேலும் அமெரிக்க ஆப்பிள்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்த பிரியங்கா காந்தி மாநிலத்தில் ஏற்படும் சேதத்தின் அளவு குறித்து ஒன்றிய அரசு முழுமையாக அறியவில்லை. ஆப்பிள் களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும். இதனால் இமாசலப் பிரதேசத்தில் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment