அசாம் முதலமைச்சரின் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

அசாம் முதலமைச்சரின் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கவுகாத்தி, செப் 14 அசாம் மாநில பாரதீய ஜனதா முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா. இவரது நிறு வனம் ஒன்று ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று இருப்பதாக அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாக காங் கிரஸ் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'விவ சாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பிரதமர் மோடி கிசான் சம் படா திட்டத்தைத் தொடங்கி னார். ஆனால் அசாமில் முத லமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவி யின் நிறுவனம் ரூ.10 கோடி மானியத்துடன் கூடிய கடன் பெற உதவியுள்ளார். பாரதீய ஜனதாவினரின் வளர்ச்சிக் காகத்தான் ஒன்றிய அரசு திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பி இருந்தார். 

இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். இது மாநில அரசியலில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள் ளது. ஆனால், இந்த குற்றச் சாட்டை ஹிமந்தா பிஸ்வா சர்மா மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'எனது மனை வியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதி மானியமும் பெற்ற தில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகி றேன்' என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment