ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,  செப். 28 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் மென் பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட் டார். இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்தது. மாநிலம் முழுவதும் முக்கிய மான இடங்களில் பாது காப்பை உறுதி செய்வது தொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று  (27.9.2023) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநிலத்தில் மொத்தம் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024-_2025ஆ-ம் ஆண்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் ரெயில்வே நிர்வாகம் இருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவ தற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுகிறது. அதனால் இந்த இவ்வளவு காலம் ஆகிறது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 2016ஆ-ம் ஆண்டு முதல் இவ் வழக்கில் பல்வேறு உத்தரவுகளை இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித் துள்ளது. ஆனால், ஏழரை ஆண்டுகளாகியும் 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதனால், ரெயில் நிலையங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

இதுபோன்ற பணிகளுக்கு நிதி நிலையை காரணம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதற்கான கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும். வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment