ஆன்மிகம் பற்றி ஆளுநர் ரவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

ஆன்மிகம் பற்றி ஆளுநர் ரவி

"காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி பொறுப்பேற்று, 50 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, ஏனாத்தூரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை வளா கத்தில், 2004இல், 50 அடி உயர ஸ்தூபி நிறுவப்பட்டது.

தற்போது, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 89ஆவது ஆண்டு ஜெயந்தி விழா கொண் டாடப்படும் நிலையில், இந்த ஸ்தூபி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.

இந்த ஸ்தூபியை திறந்து வைத்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

இந்த மாபெரும் தேசமான பாரதத்தை கட்டி எழுப்பியதில், ஆதி சங்கராச்சாரியாரின் பங்கு மகத் தானது. ஸநாதனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கி, பாரதத்தின் புராதன மகிமை பொருந்திய ஒரு தேசமாக விளங்கி வருகிறது.

பாரதத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. 'வசுவதை குடும்பம்' அதாவது, உலகம் அனைத் தும் ஒரே குடும்பம் என்ற பரந்த கருத்து நம்மை வழி நடத்துகிறது.

கரோனா தொற்று பரவிய காலத்தில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை, 125 நாடுகளுக்கு இலவசமாக வினியோகித்தோம். மற்ற நாடுகள், தங்கள் லாபத்தை பற்றி கவலைப்படுகின்றன.

பல்வேறு பிரச்சினைகள், மோதல்கள், போர்கள் நடக்கும் இந்த உலகில், மீண்டும் விஸ்வ குருவாகி உலகிற்கு ஒளிகாட்ட, இதுவே நமக்கு சிறந்த வாய்ப்பு. சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம், பாரதத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாக உடையது.

இவ்வாறு ஆளுநர் பேசினார்."

('தினமலர்' 21.9.2023 (பக்கம் 14)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைப் பொறுத்த வரை - அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் என்பதை அவ்வப்போது பச்சையாகக் காட்டிக் கொண்டு தான் வருகிறார்.

'ஸநாதனம்' என்று ஆரம்பித்தார். 'ஸநாதனம்' என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வில்லை. ஸநாதனம் என்றால் வர்ணாசிரமம் என்று தான் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார். ('தெய்வத்தின் குரல்'  முதல் பாகம்)

ஆக. ஜாதி தர்மத்தைக் காப்பாற்றுவதுதான் இவர்களின் நோக்கம். ஜாதி என்று வருகிறபோது பார்ப்பான் - அதாவது அவர்கள் மொழியில் கூற வேண்டுமானால் 'பிராமணர்கள்' பிர்மாவின் நெற் றியில் பிறந்தவர்கள். (பிர்மா ஆண் கடவுள் என்பது நினைவில் இருக்கட்டும்!)

இந்த உலகத்தை பிர்மாவானவர் பிராமணர் களுக்காகவே படைத்தான் என்கிறது மனுதர்மம். இந்த நிலையில் திரு. ஆர்.என். ரவி ஆன்மிகம், ஸநாதனம் பற்றி உருகி உருகிப் பேசுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது.

ஆன்மிகத்தைப்பற்றிப் பேசும் ஆர்.என். ரவி அவர்களுக்கு 'துக்ளக்' சோ ராமசாமியை விட்டுப் பதில் சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

துக்ளக் சோ ராமசாமி பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை "அருள் வாக்காக" மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையிலேயே நடிக்கத் தெரிய வேண்டும். ('துக்ளக்' 26.10.2016 பக்கம் 23).

ஆன்மிகம் என்றால் என்ன என்பதற்கு சோவின் இந்தப் பதிலே போதுமானது அல்லவா!



No comments:

Post a Comment