புதுவை தமிழ்ச் சங்கத்தில் "சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும்" சிறப்பு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

புதுவை தமிழ்ச் சங்கத்தில் "சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும்" சிறப்பு கருத்தரங்கம்

புதுச்சேரி, ஆக.25- திராவிடர் கழகம் புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் புதுவை தமிழ் சங்கத்தில் சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும் சிறப்பு கருத்து அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்குமாவட்ட திராவிடர் கழக தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் அறிவழகன் வரவேற்றார். திராவிடர் கழக மாவட்ட காப்பாளர்கள் இரா. சடகோபான், இர.இராசு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் ரஞ்சித் குமார், திராவிடர் கழ கம் பொதுக்குழு உறுப் பினர்கள் விலாசினி, லோ.பழனி, பகுத்தறிவா ளர் கழகம் எழுத்தாளர் மன்றம் துணை பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

விழாவில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தோழர் ஜீவானந்தம் அவர்களின் படத்தினை திறந்து வைத்து நோக்க உரையாற்றினார்.

திராவிடர் கழக பேச் சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். 

திராவிடர் கழக மாவட்ட துணைத் தலை வர் குப்புசாமி, திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் வீர. இளங் கோவன், தொழிலாளர் அணி செயலாளர் கே. குமார், பகுத்தறிவாளர் கழக தலைவர் நடராஜன், திராவிடர் கழக இளைஞ ரணி தலைவர் தி.இராசா, புதுச்சேரி நகராட்சி வடக்கு தலைவர் கிருஷ் ணசாமி, செயலாளர் ராமன், தெற்கு தலைவர் ஆறுமுகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடே சன், நகராட்சி கிழக்கு தலைவர் துளசிராமன், நகராட்சி கிழக்கு செயலாளர் முத்துவேல், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சிவராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

முடிவில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். 

விழா நிறைவில் புதுச் சேரி மாநில திராவிடர் கழக மாநில தலைவர் சிவா வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு அவ ருக்கு அனைத்து தலை வர்களும் நிர்வாகி களும் சால்வை அணிவித்து மற் றும் பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment