காஞ்சிபுரத்தில் அறிவியல் மனப்பான்மை நாள் பொதுக்கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

காஞ்சிபுரத்தில் அறிவியல் மனப்பான்மை நாள் பொதுக்கூட்டம்!

காஞ்சிபுரம், ஆக. 25- காஞ்சிபுரம், காந்தி சாலை, தந்தை பெரியார் நினை வுத்தூண் அருகில் 23.8.2023 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில்,  பகுத்தறிவாளர்  கழகத்தின், 'அறிவியல் மனப்பான்மை நாள்'  கூட் டம் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் பா. இளம்பரிதி தலைமை வகித்தார்.  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய பாடலை காஞ்சி உலகஒளி சிறப் பாகப் பாடினார்.    மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத் தினார். மாவட்ட கழக செயலாளர் கி. இளையவேள் , மாவட்ட திரா விடர் கழக இணை செயலாளர் ஆ. மோகன்,  ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், காஞ்சிபுரம் மாநகர பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் கே. பிரபாகரன் ஆகியோரும் முன்னிலை வகித்து உரையாற்றினர். 

மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ந.  சிதம்பரநாதன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப் பாளர் நாத்திகம் நாகராசன்,  பாலாறு பாதுகாப்புக் கூட்டியக் கத்தின் பொறுப்பாளர் காஞ்சி அமுதன், பேசும் கலை வளர்ப் போம் அமைப்பின் பொறுப்பாளர் மருத்துவர் மு. ஆறுமுகம், பல்லவர் மேடு பகுதி பகுத்தறிவாளர் கழகத் தோழர் க. சேகர் ஆகியோர் உரை யாற்றினர்.

தலைமை கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார். 

'அறிவியல் வாழ்வு' என்ற தலைப் பில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார்.  அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, அறிவை எல்லா நிலையிலும் பயன்படுத்தச் சொன்னவர் பெரியார்; அறிவிய லுக்குப் புறம்பாக சனாதனத்தை நிலைநிறுத்தச் சொல்வது பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்துத்துவாவினர் என்றும் பெரியார், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பின்பற்றி நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளையும் பிஜேபி ஆட்சியால் நடக்கின்ற கேடுகளையும் புள்ளி விவரங்களு டன் எடுத்துக்கூறி இவர்களை எதிர்கொள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி. வீரமணி மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் குறிப்பிட்டு உரையாற்றினார். 

ஏராளமான பொதுமக்கள் கூடி கூட்டத்தின் கருத்துகளைக் கேட்டுத் தெளிந்தனர். 

கூட்டத்தில், திராவிடர் கழகக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன், பா. கார்த்திக்,  உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை குறள்அமிழ் தன், அ.வெ. சிறீதர், பகுத்தறிவாளக் கழகத் தோழர் ரத்தின பச்சையப் பன்,  மருத்துவர் சத்யபிரியா, கவி ஞர் அமுதகீதன்,  கவிஞர் பாரதி விஜயன், கவிஞர் கு.ஆறுமுகம், தோழர் ஆர். தாமோதரன், கழகத் தோழர் முரளி, கு. அருளானந்தம், ரவி பாரதி, மகேந்திரன், பழனி, ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராள மான தோழர்கள்  பங்கேற்றனர்.

காஞ்சி மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னதம்பி அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment