செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம்


செய்யாறு, ஆக. 31-
செய்யாறு பகுத் தறிவாளர் கழகம் சார்பில் இந் திய பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு "அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம் அறியாமையை அகற்றுவோம்" என்ற தலைப்பில் செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

செய்யாறு கழக மாவட் பகுத் தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் நல்லாசிரியர் பா.ரவிச்சந்திரன், ஆசிரியர் எச். முபாரக், சிறுநல்லூர் டி.சின்ன துரை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோவிந்தன், பொன்,சுந்தர், வெ.இளஞ்செழி யன், என்.கஜபதி, தே.ராஜேஷ், வெ.தயாளன், என்.பரந்தாமன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மு.வெங்கடேசன் நன்றி கூறி னார். காஞ்சி உலக ஒளி பகுத் தறிவு பாடல்களை பாடினார்.

No comments:

Post a Comment