வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கழக இல்லந்தோறும் தோழர்களை சந்தித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கழக இல்லந்தோறும் தோழர்களை சந்தித்தனர்

சென்னை, ஆக. 31- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையின்படி வடசென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள் மற்றும்  கழகக் குடும்பத்தவர்களை பகுதி வாரியாக, மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் மற்றும் ஓட்டேரி பகுதி தலைவர் சி.பாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து கழக செயல்பாடுகள் குறித்து உரையாடினர்.

குறிப்பாக, உடல்நிலை காரண மாக கழக நிகழ்ச்சிகளுக்கு வர இயலாத மூத்த தோழர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். தந்தை பெரியார் பிறந்தநாள், தமிழர் தலைவர் பிறந்தநாள், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம், அதிலும் குறிப்பாக சொந்த வீடு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக கழகக் கொடி ஏற்றுவது, தங்கள் பகுதியின் முக்கிய பகுதிகளில் கழகக் கொடிக்கம்பங்கள் நடுவது, வாய்ப்புள்ள இடங்களில் கரும்பலகை வைத்து எழுதுவது, சுவரெழுத்துப் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை குறித்து கலந்துரையாடப் பட்டது.

முதற்கட்டமாக புரசை, ஓட் டேரி, அயன்புரம், முகப்பேர், வில்லிவாக்கம், ஜி.கே.எம். காலனி, கொளத்தூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஓட்டேரி சிட்டிபாபு, சேகர் - இளவரசி, முகப்பேர் பொறியாளர் சுந்தரராஜுலு, வில்லிவாக்கம் தங்க மணி குணசீலன், ஜி.கே.எம். காலனி அன்புச்செல்வன், கொளத்தூர் சுமதி -  கணேசன், ப.கோபாலகிருஷ் ணன், வி.டெய்சி மணியம்மை, எருக்கமாநகர் சொ.அன்பு, பல்லவி, வடிவேலு- வெண்ணிலா, வியாசர்பாடி அமுதவள்ளி தணிகாசலம் மற்றும் கழகத் தோழர்களை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து உரையாடினர்.

No comments:

Post a Comment