அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு முருகன்-ஆதிலட்சுமி ஆகியோரின் மகள் விஜயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 30.8.2023 அன்று காலை 9 மணி அளவில் விழுப்புரம் சோலை திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழன்பன் என்கிற கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், பண்ருட்டி நகரத் தலைவர் புலிக்கொடி, தடுப்பணை தட்சிணாமூர்த்தி, குறத்தி, கழகத் தலைவர் ரட்சகன், விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான், அழக பெருமாள்குப்பம் பாண்டியன், ஏரி பாளையம் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று பாராட்டுரை நல்கினர் முடிவில் தோழர் ராஜேந்திரன் நன்றி கூறினார்


No comments:

Post a Comment