குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : கருநாடகத்தில் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : கருநாடகத்தில் தொடக்கம்


பெங்களுரு, ஆக.31
கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர் தலின்போது காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித் தனர். அவை வீடுகள் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் (கிரக ஜோதி), இல்லத்தரசிகளுக்கு மாதந் தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை கிரக லட்சுமி), பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் (சக்தி திட்டம்), அன்னபாக்ய திட்டத் தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டு உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை(யுவநிதி) ஆகியவை ஆகும். இதில் ஏற்கெனவே கிரக ஜோதி, அன்னபாக்ய, சக்தி திட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டு விட்டன. 

இந்த நிலையில் கிரகலட்சுமி திட்டம் ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி (நேற்று) அமல்படுத்தப்படும் என்று கருநாடக அரசு சார்பில் அறிவிக் கப்பட்டு இருந் தது. அதன்படி நேற்று கிரக லட்சுமி திட்டத்துக்கான தொடக்க விழா மைசூரு டவுன் மகா ராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து நடந்தது. 

 விழாவில் கலந்து கொள்வதற்காக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மைசூருக்கு வருகைதந்த போது அவர்களுக்கு காங்கிரசார் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதையடுத்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வரவேற்று பேசினார். பின்னர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர் களுக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ரிமோட் பொத்தானை அழுத்தியதும், கிரக லட்சுமி திட்டத்துக்கான காசோலை அட்டை பூக்களின் நடுவில் இருந்து ரிமோட் மூலம் மேலே உயர்த்தப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது. 

அதையடுத்து அந்த அட்டையின் மீது மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட் டோர் பூக்களை தூவி கிரக லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.   கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் பயன் பெற்ற இல்லத்தரசிகளுக்கு அதற்கான ஆணை அட்டைகளும் வழங்கப்பட் டது. அதன்பின்னர் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்கள் மேடையில் ஏறி தலைவர்களுடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இல்லத்தரசிகள் தகுதி படைத்தவர்கள் ஆவர். ஆனால் இதுவரை 1 கோடியே 10 லட்சம் மட் டுமே இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் முதல் மாதந் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காத வர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு அக் டோபர் மாதம் முதல் இந்த உதவித் தொகை கிடைக்கும் என்றும் கருநாடக அரசு அறிவித்துள்ளது. 

முதலமைச்சர் சித்தராமையா முக்கிய தலைவர்களான அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, ராகுல் காந்தி  மற்றும்  ஆகியோர் மட்டுமே பேசினர். விழாவில் ராகுல் காந்தி இந்தியில் பேச அதை சட்டப் பேரவை உறுப்பினர்  சரத் பச்சேகவுடா  கன்னடத்தில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரக லட்சுமி திட்டம் மூலம் நேற்று ஒரேநாளில் 1.10 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடி யாக செலுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த திட்டத்திற்காக விண் ணப்பித்த பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப் பட்டதற்கான குறுந்தகவல்கள் அவர்க ளுடைய அலைபேசிகளுக்கு அனுப்பப் பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் ரூ.17,500 கோடி செலவாகும் என்று அரசு கணக்கிட்டு உள்ளது. 

இந்த திட்டம் மூலம் காங்கிரஸ் அரசு அறிவித்த 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், வேலையில்லா பட்ட தாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாக யுவநிதி திட்டம் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என் றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கிரக லட்சுமி திட்டம் நேற்று  (30.8.2023) கருநாடகத்தில் தொடங் கியது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் இல்லத்தரசிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த திட்டத்தின் மூலம் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.  நேற்று திட்டம் தொடங்கியதும் ஏராளமானோருக்கு அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அவ்வாறு வங்கிக் கணக்கில் பணம் நேற்று வந்து சேராதவர்களுக்கு இன்று (31.8.2023) செலுத்தப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் அரசு அறிவித்த 5 வாக்குறுதிகளில் சக்தி திட்டம் கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதியும், அன்னபாக்ய திட்டம் கடந்த மாதம்(ஜூலை) 11-ஆம் தேதியும், கிரக ஜோதி திட்டம் கடந்த 5-ஆம் தேதியும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலை யில் 4ஆ-வது வாக்குறுதியான கிரக லட்சுமி திட்டம் நேற்று (30-ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment