கடவாசலில் மயிலாடுதுறை மாவட்ட திராவிட மகளிர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

கடவாசலில் மயிலாடுதுறை மாவட்ட திராவிட மகளிர் சந்திப்பு

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் சார்பில் மகளிர் கலந்துரையாடல் கூட்டம் சீர்காழி கடவாசலில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் அலுவலகத்தில் 15.7.2023 காலை 11 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தலை மையேற்று கருத்துரை வழங்கினார். 

அவர் தனது உரையில் பெண்களின் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் தொடர்ந்து போராடிய தந்தை பெரியா ரின் தொண்டினை நினைவு கூர்ந்து பெரியாரின் கொள்கைகள் செயல்வடி வம் பெற பெண்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்த நிகழ்வில் கோமதி செல்வம், சு.புவனேஸ்வரி, பிரியதர்சினி, கவிதா முத்துக்குமார், ராணி, வைஷாலி, புனிதா,  செல்வராணி, கவிதா, அபிநயா, யமுனாதேவி, அருணா தேவி, தமிழிசை வெண்பா                 திருஞானம், மகேஸ்வரி, மலர் விழி வீரசேனன், ரேவதி, ஹேம லதா, நித்தியா, சுமதி நாகராஜன், இந் திரா குணசேகரன், மாலா  விஜயராஜா,  வெள்ளையம்மாள், பவித்திரா, விஜயலெட்சுமி மற்றும் மகளிரணியினர், பெரியார் பிஞ்சுகள் பங்கேற்றனர். 

திருவாருர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், செய லாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான வள்ளுவன், துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சாமிதுரை, மயி லாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி. பாண்டியன், ஜெக. அறிவழகன், வீர சேனன், மச்சகாந்தன், பன்னீர்செல்வம், கண்ணன், பிரகாசம், ஆனந்தன் மற்றும் பலர் பார்வையாளர்களாக   கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது

No comments:

Post a Comment