தோழர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் - வாழ்த்துகள் முதலமைச்சருக்கு இரா.முத்தரசன் நன்றி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

தோழர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் - வாழ்த்துகள் முதலமைச்சருக்கு இரா.முத்தரசன் நன்றி...

சென்னை, ஜூலை 17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்தாவது,

மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து  வைத்த முதலமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மூத்த தலைவர் தோழர்.என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலம் “மதிப்புறு டாக்டர்” பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக,  தோழர். என்.சங்கரய்யாவுக்கு  தமிழ்நாடு அரசு உருவாக்கிய “தகைசால் தமிழர்” விருதுக்கு முதல் விருதாளராக தேர்வு செய்து, விருது வழங்கி சிறப்பு செய்தது. தொடர்ந்து மூத்த தலைவர் தோழர்.இரா.நல்ல கண்ணு அவர்களுக்கு தகைசால் விருது வழங்கி பெருமைப் படுத்தியது .

நாட்டுக்கும், மக்களின் நலனுக்கும் பாடுபட்ட மூத்த தலை வர்களை பெருமைப்படுத்தி, அவர்களது நல்லியல்பு களை இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு நன்றி தெரிவிப்பதுடன், 102ஆ வது பிறந்த நாளில் மதிப்புறு டாக்டர் பட்டம் பெறும் தோழர். என்.சங்கரய்யா மேலும் பல்லாண்டு நலமுடன் வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. 

- இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment