ஏழுமலையான் சக்தி இவ்வளவுதானா? திருப்பதி மலைப்பாதை விபத்துகளை தடுக்க மகாசாந்தி ஹோமமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

ஏழுமலையான் சக்தி இவ்வளவுதானா? திருப்பதி மலைப்பாதை விபத்துகளை தடுக்க மகாசாந்தி ஹோமமாம்!

திருமலை, ஜூன் 15 - திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் பக்தர்களின் வாகனங்கள் சேதம் அடைவதும், பக்தர்கள் படுகாயமடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், திருப்பதி மலைப்பாதையில் விபத்துகள் நடக்காமல் இருக்கவும், பக்தர்களுக்கு எந்தவித ஆபத்துகள் வராமல் இருக்கவும் நேற்று (14.6.2023) திருமலையில் இருந்து திருப்பதி வரும் வழியில் 7-ஆவது மைல் பகுதியில் அமைந்துள்ள அனுமன் சிலை அருகே தேவஸ்தானம் சார்பில் மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டதாம். இந்த ஹோம பூஜையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, புரோகிதப் பார்ப்பனர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனராம்.

No comments:

Post a Comment