அமைச்சர் செந்தில் பாலாஜி கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

தொல். திருமாவளவன் கண்டனம்

சென்னை, ஜூன் 15  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார்.  விசிக தலைவர் திருமா வளவன் அளித்த பேட்டியில், 

“பாஜக அரசை ஆதரித்து, மாநில அரசு இயங்கி வந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியையும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவையும் கொள்கை அடிப் படையில் கடுமையாக விமர்சித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், கைது நடவடிக்கை மூலம் முதலமைச் சருக்கு அச்சுறுத்தலை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற் படுத்தி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. குறிப்பாக முதலமைச்சரை அச்சுறுத் தும் நடவடிக்கை என விசிக கருதுகிறது. இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது'' என்றார்.


No comments:

Post a Comment