பக்தி என்பது பிசினஸ்தானே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

பக்தி என்பது பிசினஸ்தானே!

தரிசனத்தில் என்ன ஏழை - பணக்காரன்; கோயில்களில் முக்கிய விருந்தினர்களுக்கு தனி தரிசன ஏற்பாடு என்பது கூடாது; வழிபாட்டில் என்ன ஏழை - பணக்காரன் என்று ஹிந்து முன்னணி கூறியுள்ளது.

அடடே இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஹிந்து முன்னணிக்கு கூட கொஞ்சம் புத்தி வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. ஹிந்து முன்னணி கூறுவது இருக்கட்டும்; அந்தக் கோயிலில் இருக்கும் கடவுள் ஏன் இந்த வேறுபாட்டை அனுமதிக்கிறார்?

இப்படி எல்லாம் தரிசனத்திற்கு வரும் மக்களை ஏழை - பணக்காரன் என்று பிரிக்கலாமா? பிரிக்கக் கூடாது என்று எந்த பக்தரின் கனவிலாவது எந்தக் கடவுள் ஆவது கூறியது உண்டா?

 விஅய்பி தரிசனம் என்றால் கொழுத்த வருமானம் அவ்வளவுதான்! 

பக்தி என்பது ஒரு பிசினஸ் தானே!

No comments:

Post a Comment