ஜப்பானில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிகள் செய்யத் தயார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

ஜப்பானில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிகள் செய்யத் தயார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, மே 29 - ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளர்.

டோக்கியோவில் நேற்று (28.5.2023) நடைபெற்ற ஜப்பான் வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றர்.

ஜப்பான் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற வர்மக் கலை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை முதலமைச்சர் பர்வையிட்டர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:

வீழ்ந்த வேகத்தில் எழுச்சி பெற்ற நாடு தான் ஜப்பான். மக்களின் உழைப்பால்தான் அது சாத்தியமானது. ஜப்பான், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கு இடையே நிறைய ஒற்று மைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டுக்கும் ஒரே மாதிரியான இலக் கணக் கட்டமைப்பு உள்ளது. தமிழர்கள் ஜப்பான் மொழியைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறர்கள். ஜப்பானியர்களும் தமிழைக் கற்க முயற்சிக்கின்றனர்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, யயோய் காலத்தில் வணிகத்துக்காக ஜப்பான் நாட்டுக்கு தமிழர்கள் வந்துள்ளனர். நெல் விதைப்பதற்கு முன்பாக உள்ள சடங்குகளை தமிழர்கள்தான் இங்கு கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறர்கள் என்பதை ஆய்வாளர் சுசுமு ஓனோ குறிப்பிடுகிறர்.

தமிழர் திருநாளான பொங்கல் திரு நாளுக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழா வுக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது.

 தமிழறிஞர் அய்ராவதம் மகாதேவன், ஜப்பானுக்கு வந்த போது, டோக்கியோவுக் கும், ஒசாகாவுக்கும் இடையே இருக்கும் நகோயா என்ற நகரத்தைப் பர்த்துள்ளர். அங்கு இருந்த பெயர்ப் பலகை ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துரு சாயலில் எழுத்து இருந்தது.

பிராமியில் எழுதப்பட்ட எழுத்தின் பொருளும், அதற்கான தமிழ்ச் சொல்லின் பொருளும் ஒரே மாதிரி இருப்பதை அவர் விவரித்திருக்கிறர்.

இப்படி, தமிழ்நாட்டுக்கும், ஜப்பானுக்கு மான தொடர்பு மிக அதிகம்.

ஜப்பான் தமிழ்ச் சங்கங்கள் சார்பில், தமிழ் மொழி வளர்ப்புக்காக பல்வேறு முன் னெடுப்புகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஜப்பானில் உள்ள பள்ளிகளில் தமிழ் நூலகங்கள் அமைக்க உதவி செய்வது, பள்ளிகளுக்கு இடையே தமிழ் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்துவது எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழ்ச் சங்கம் செய்து வருகிறது.

தமிழைக் காப்பது தமிழினத்தைக் காப்பதாகும். அதைத் தமிழ்ச் சங்கங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசும், திமுகவும் செய்யும். கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேடல்களுக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்றர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment