காவி பயங்கரவாதிக்கு சிறை நீதிமன்ற உத்தரவும் - நமது பங்களிப்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

காவி பயங்கரவாதிக்கு சிறை நீதிமன்ற உத்தரவும் - நமது பங்களிப்பும்

முத்தமிழறிஞர் கலைஞர், கவிஞர் கனி மொழி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த வழக்குரைஞர் கோபிநாத் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 17.10 2021 அன்று குற்ற எண்: 73/2021 இன் கீழ் 153(கி) மற்றும் 506(2) பிரிவுகளில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அடுத்த நாளே பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார் - மேற்படி தண்டையார் பேட்டையை சார்ந்த வழக் குரைஞர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு (Intervene Petition) தாக்கல் செய்து ஆஜரானோம்- முன்னதாக பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் சார்பாக வழக்குரைஞர் பால் கனகராஜ் 50க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களோடு நீதிமன்றத் திற்கு வந்து பிணை கேட்டார்  தன்னந்தனியாக சென்று இடையீட்டு மனு தாக்கல் செய்யப் போகிறோம் அனுமதி கொடுங்கள் என்று மூன்றாவது ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். 

அதனடிப்படையில் வழக்கு விசாரணை நடந்தது 10.45 க்கு நீதிமன்றம் கொடுத்த நேரம் வெறும் 3 மணி நேரம் ,2 மணிக்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய சொல்லி உத்தரவிட்டார், அதன்படி உரிய நேரத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்து வாதிட்டோம் அதாவது : மேற்படி கல்யாண ராமன் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறார் அதுவும் குறிப்பாக திமுக விற்கு எதிராகவும், திராவிடர் கழகத்திற்கு எதிராகவும் உண்மைக்கு மாறான, பொய்யான ,திரிக்கப்பட்ட தகவல் களைப் பரப்பி வருகிறார். 

வஞ்சக எண்ணத்தோடு, கெடுமதியோடு ,பிஜேபி ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறார் அதன் காரணமாக அவர் மீது இதே சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது அதாவது CCB.Crime.No's: 490/2018, 336/2019, 60/2020 and 98 /2020  ஆகிய குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இசுலாமியர் குறித்து இழிவாகப் பேசியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டு முன் பிணை கோரிய போது  CRL.O.P.1773/2016 என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் இசுலாமியர், கிறிஸ்துவரை இழிவு படுத்திய, வெறுப்பு பேச்சோ பேச மாட்டேன் என்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது அதன்படி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தவர் தற்போது அந்த உத்தரவை மீறியுள்ளார் என்று வாதிட்டோம், 

மேலும் கோவை மாவட்டம் குனியமுத்தூரில் இசுலாமியரை தரக்குறைவாக, தரம் தாழ்ந்த வகையில் பேசியதற்காக குற்ற எண் 119/2018 என்ற வழக்கில் பிணை பெறும் போது கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இனிமேல் இசுலா மியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்தோ, அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்தோ இழிவாக பேசவே கூடாது என்று உத்தரவிட்டபோதும், வேண்டு மென்று இசுலாமியர்கள் வேற்று கிராகவாசிகள், ஊர் பெயர் தெரியாத அப்துல்லா என்பவருக்கு எல்லாம் திமுக  மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக் குது, இது தான் திராவிடர் இயக்க கொள்கையை திமுக பின் பற்றும் இலட்சணமா என்றும், 

தாலிபான்களுக்கு ஆள் பிடிக்கும் வேலையை தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் செய் கிறார்கள் என்றும் உண்மைக்கு மாறான செய்தி களை திட்டமிட்டு பரப்புகிறார். எனவே அவ ருக்கு பிணை தரக்கூடாது என்றும் 

மேலும் உச்ச நீதிமன்றம்,

Pravasi Bhalai Sangathan Vs Union of India (AIR 2014 Supreme Court -1591) 

Supreme Court held that the statutory provisions and particularly the penal law provides sufficient remedy to Curb the menace of hate speeches.

 Thus, person aggrieved must resort to the remedy provided under a particular statute. The root of the problems is not the absence of laws but rather lack of their effective execution. 

In addition to that the court court must apply the hate speech prohibition objectively and speech, expression does not incite the level of abhorrence, delegitimization and rejection that risks causing discriminations or other harmful effects.

மேற்படி வழக்கில் வெறுப்புப் பேச்சு தான் இந்த உலகத்தில் நடந்த அத்துணை இனப் படுகொலைகளுக்கும்கர்த்தாவாக இருக்கிறது என்றும், வெறுப்புப் பேச்சுக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகளில் நீதிமன்றம் கவனமாக கையாள வேண்டும் என்றும், சட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டும் - அது வெறுமனே எழுதப்பட்ட காகிதமாக இருந்துவிடக்கூடாது என்றும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்ட ஆணையம் உரிய முறையில் வெறுப்புப் பேச்சை அணுக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டி வாதிட்டோம். மேற்படி வாதங்களை கேட்ட நீதிமன்றம் கல்யாண ராமன் பிணை தள்ளுபடி செய்தது.

மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டோம், அடுத்தகட்ட விசாரணைக்குள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டார் .

அதன் பிறகு சென்னை கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் காவல் துறைக்கு எடுத்துக் கொடுத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் தற்போது கல்யாண ராமன் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி யுள்ளது. 

சமூக வலை தளத்தில் அவதூறு, வெறுப்புப் பேச்சுக்கு தமிழ் நாட்டில் முதன்முறையாக தண் டனை அளிக்கப்பட்டுள்ளது- வரவேற்கத்தக்கது.

சமூக வலைதளத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்,  கவிஞர் கனிமொழி மற்றும் திராவிடர் இயக் கத்தை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வந்த கல்யாண ராமன் தண்டிக்கப்பட்டுள்ளது - திராவிட இயக்கத்தையும் சமூக நீதி கருத்துக்களை இழிவுபடுத்த நினைக்கிற சங்கப்பரிவார கும்பலுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

சமூக நீதிக்கான சட்டப்போராட்டத்தை தொடர்வோம்!

நன்றி.

வழக்குரைஞர் துரை.அருண்

- திராவிடர் கழக வழக்குரைஞரணி 

சென்னை உயர் நீதிமன்றம்.

No comments:

Post a Comment