எதிர்க்கட்சிகள் போராட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

எதிர்க்கட்சிகள் போராட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி, மார்ச் 13- நாடாளு மன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (13.3.2023) காலை 11 மணிக்கு இரு அவை களிலும் தொடங்கியது. 

அவை தொடங்கிய துடன் இந்திய நாடாளு மன்றத்தை பற்றி பிரிட் டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்கும், பிரகலாத் ஜோஷி யும் மற்றும் மாநிலங்கள வையில் பியூஷ் கோயலும் பேசினர். 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கண்டனம் தெரிவித்து அவையின் மய்யப் பகுதிக்கு வந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன் றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment