கள்ளக்குறிச்சியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

கள்ளக்குறிச்சியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 19- 18.03.2023 அன்று மாலை 5.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் இல்லத்தில் திரளான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமையேற்றார். மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன் திராவிட மாணவர் கழகத் தோழர்களிடம் சிறப்புரையாற்றினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ம.சுப்புராயன், மாவட்ட செயலாளர் ச.சுந்தர்ராஜன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர். ஜி.எஸ்.குமார், திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் இராச.மு இளமாறன், மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர், விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் எஸ்.இ.ஆர்.திராவிடப்புகழ் , மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பெ. செயராமன், நகர தலைவர் இரா.முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் முனியன் ஆகியோர் மாணவர்களிடம் உரையாற்றினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டநந்தல், சடையன்பட்டு, அரியலூர், வானவரெட்டி, சிருவலூர், எழியனூர் ஆகிய ஊர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கள்ளகுறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்:-

1) தலைவர் - மு.முனியன்

2) துணைத் தலைவர் - மு. திராவிட சசி

3) செயலாளர் - ம.தனவேல்

4) துணை செயலாளர் - அ.மணியமுதன்

5) அமைப்பாளர் - ஆ.பிரகாஷ்

6) கல்லூரி கழக அமைப்பாளர் - ச.இராஜீவ்காந்தி

7) மோகூர் ஒன்றிய அமைப்பாளர் - ப.ராகவன்

8) காட்டநந்தல் ஒன்றிய அமைப்பாளர் - ர. ரகு 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1) சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்த்த இரங்கல் 

தெரிவிப்பதுடன் வீரவணக்கத்தை செலுத்துகிறது.

2)ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெற இருக்கும் திராவிட மாணவர் கழக 80 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

3)உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் ‘விடுதலை’,  மற்றும் ‘உண்மை’, ‘மார்டன் ரேஷ்னலிஸ்ட்’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களை வாங்கிப் படிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

4) 27.03.2023 அன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பயணக் கூட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையை கேட்பது என தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொறுப்பேற்று 46 ஆம் ஆண்டு நாளில்  -‘விடுதலை’யில் “முடிந்தவரையல்ல - தந்தை பெரியார் பணியை முடிக்கும் வரை உழைப்பதில் இன்பம் காண்பது நமது கடமை!” என்ற ஆசிரியர் அவர்களின் அறிக்கையை முழுவதுமாக வாசிக்க மாணவர்கள் உணர்ச்சி பொங்க கேட்டனர். ( மாணவர்கள் எழுச்சியோடு பலத்தக் கரவொலி எழுப்பினர்) மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் இரவு 8 மணியவில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment