சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

வானூர், மார்ச் 20- 18.03.2023 அன்று காலை 10.30 மணிக்கு திண்டிவனம் மாவட்டம், வானூர் ஒன் றியம், சின்னக்காட்ராம்பாக்கத்தில் ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.

உற்சாகமாக மாணவ கழகத் தோழர்கள் கிராமத்தில் கழகக் கொடியினை ஏற்றி மகிழ்ந்தனர். இக்கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை யேற்றார். மாநில கழக அமைப்பாளர் இரா.குண சேகரன் திராவிட மாணவத் தோழர்களிடம் சிறப்புரையாற்றினார். 

மேலும் மாநில இளைஞரணித் துணைத் தலைவர் தா.தம்பிபிரபாகரன், சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இராச. மு.இளமாறன், விழுப்புரம் மண்டல செயலாளர் தா.இளம்பரிதி, திண்டிவனம் மாவட்ட தலைவர் இர.அன்பழகன், மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நவா. ஏழுமலை, நகரத் தலைவர் உ.பச்சையப்பன், வானூர் வட்ட தலைவர் தி.க. அன்பரசன், வானூர் வட்ட செயலாளர் சிறீதர் ஆகியோர் மாணவர்களிடம் உரையாற்றினர்.

கூட்டத்தில் பா.பிரகாஷ், இர.வீரசாந்த், இரா.கனிமொழி, நா. அஜித், வி.கவியரசு, ச.சஞ்சை, பிரவீன், வே.அருண்பாண்டியன், மோகன்ராஜ், விஷ்வா, ஏ.எழிலரசன், அசோக் மற்றும் இரு பதுக்கும் மேற்பட்ட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1) சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன் வீரவணக் கத்தை செலுத்துகிறது.

2) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து பள்ளி, கல் லூரிகளிலும் திராவிட மாணவர் கழக அமைப் பினை உருவாக்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

3) ஆகஸ்ட் 5இல் கோவையில் நடைபெற இருக்கும் திராவிட மாணவர் கழக 80 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

வானூர் ஒன்றியம், சின்ன காட்ராம்பாக்கம் மற்றும் கூத்தப்பாக்கம் ஒன்றியம் பாஞ்சாலம் பகுதிகளில் திராவிட மாணவர் கழக புதிய கிளைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு புதிய பொறுப் பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

திராவிட மாணவர் புதிய கிளைக் கழகப் பொறுப்பாளர்கள்:-

சின்னக்காட்ராம்பாக்கம்: 

1) தலைவர் - இரா.பிரசாந்த்

2)துணைத் தலைவர் - ஏ.எழிலரசன்

3) செயலாளர் - வே.தினேஷ்

4) துணைச் செயலாளர் - ம.சூர்யா

5) அமைப்பாளர் - கு.பிரபாகரன்

பாஞ்சாலம்:

1) தலைவர் - வி.கவியரசு

2) துணைத் தலைவர் - பெ.கார்த்தி

3) செயலாளர் - நா. அஜித்

4) துணைச் செயலாளர் -பெ. திருமாவளவன்

5) அமைப்பாளர் - அ.மணியம்மை

ஆகிய புதிய திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட் டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வே.ப.மாரிமுத்து அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார். திராவிட மாணவர்களின் உற்சாகத்துடன் எழுச்சி யோடு நடைபெற்ற இக்கூட்டம் மதியம் ஒரு மணியளவில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment