“ கார் டயர் வெடித்தது 'கடவுளின்' செயலா?” : உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

“ கார் டயர் வெடித்தது 'கடவுளின்' செயலா?” : உயர்நீதிமன்றம் கேள்வி

மும்பை, மார்ச் 13 டயர் வெடிப்பது கடவுளின் செயல் அல்ல, மனித அலட்சியம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், கார் விபத்தில் இறந்தவரின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிரா கரித்தது. 

அக்டோபர் 25, 2010 அன்று, மகரந்த் பட்வர்தன் (38)என்பவர் தனது இரண்டு சக ஊழியர்களு டன் புனேவிலிருந்து மும்பைக்கு பயணம் செய்தார். அந்த சக ஊழியர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வேகமாகச் சென்றதால், பின் சக்கரம் வெடித்து, ஆழமான பள்ளத்தில் கார் விழுந்ததில், மகரந்த் பட்வர் தன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். மகரந்த் பட்வர்தனின் குடும்பத்திற்கு ரூ.1.25 கோடி வழங்க வேண்டும் என்று 'மோட் டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம்' கடந்த 2016-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி யது..இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து நியூ இந்தியா அஷ் யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம், மும்பை உயர்நீதி மன்றத்தில், மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. 

இந்த மனு நீதிபதி எஸ்.ஜி. டிகே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது காப்பீட்டு நிறுவனம் தரப்பு வழக்குரைஞர், இழப்பீட் டுத் தொகை அபரிமிதமானது மற்றும் அதிகப்படியானது என் றும் டயர் வெடித்தது கடவுளின் செயல் என்றும் ஓட்டுநரின் அலட்சியத்தால் அல்ல என்றும் கூறினார். ஆனால் காப்பீட்டு நிறுவனத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் டயர் வெடிப்பதை கடவுளின் செயல் என்று சொல்ல முடியாது. இது மனித அலட்சியத்தின் செயல்" என்று கூறியது. 

மேலும் “டயர் வெடிப்பதற்கு அதிவேகம், குறைந்த காற் றோட்டம், அதிக காற்றோட்டம் அல்லது செகண்ட் ஹாண்ட் டயர்கள் மற்றும் வெப்பநிலை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. வாகனத்தின் ஓட்டுநர் அல்லது உரிமையாளர் பயணம் செய்வதற்கு முன் டயரின் நிலையை சரிபார்க்க வேண்டும். டயர் வெடிப்பதை இயற்கை யான செயல் என்று கூற முடி யாது. 

இது மனித அலட்சியம்" என்று உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப் பட்டுள்ளது. வெறுமனே டயர் வெடித்தது கடவுளின் செயல் என்று கூறி, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்காமல் இருக்க முடியாது என்று கூறி, அந்நிறுவனத்தின் மனுவை தள் ளுபடி செய்து உத்தரவிட் 

டது..


No comments:

Post a Comment