"பாஜகவினர் நடத்திய அரைகுறை ஆடையில் அனுமன் சிலைக்கு முன் பெண் பாடி பில்டர்கள் ஷோ.." காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

"பாஜகவினர் நடத்திய அரைகுறை ஆடையில் அனுமன் சிலைக்கு முன் பெண் பாடி பில்டர்கள் ஷோ.." காங்கிரஸ் கண்டனம்

போபால், மார்ச் 13- மத்தியப் பிரதே சத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அங்குள்ள ரட்லாம் மாவட்டத்தில் பெண்க ளின் 'பாடி பில்டிங்' நிகழ்ச்சி நேற்று (12.3.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ரட்லாம் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சைதன்ய காஷ்யப், நகர மேயர் பிரகலாத் படேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சேர்ந்து நடத்தினர். வெளிநாடு களை சேர்ந்த பாடி பில்டிங் பெண்கள், உள்ளூர் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

'பாடி பில்டிங்' ஷோ என்ப தால் பெண்கள் டூ பீஸ் உடை களை மட்டுமே அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சூழலில், அந்நிகழ்ச்சி மேடை யில் ஹிந்துக் கடவுள் அனுமனின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான தகவல் அங் குள்ள காங்கிரஸ் நிர்வாகிக ளுக்கு தெரியவரவே, அவர்கள் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு கூட்டமாக வந்தனர். பின்னர், நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறிய காங்கிரஸார், அங்கு கங்கை நதி தீர்த்தத்தை தெளித்தனர். மேலும், அனுமன் கட் அவுட்டுக்கு முன்பு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடத் திய பாஜகவினருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த அனுமன் கட் அவுட்டை காங்கிரஸார் கொண்டு சென் றனர். அவர்களை அங்கிருந்த பாஜகவினர் தடுக்க முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது இந்த காட்சிப்பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகியதால் பொதுமக்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரட்லாம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயங்க் ஜாட் கூறுகையில், 'அனுமன் ஒரு கட்டைப் பிரம்மாச்சாரி என்பது அனைவருக்கும் தெரி யும். அப்படியிருக்கும் போது, அவரது கட் அவுட்டுக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வரும் நிகழ்ச்சியை நடத்தலாமா? இது வேண்டு மென்றே அனுமனை அவமதிக் கும் செயல். இதற்காக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும், பாஜகவினரும் மக்களிடம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்ட வேண்டும்' என்றார்.  பக்தர்களுக்குள்ளேயே கலகமா? நல்லா இருக்கே!

No comments:

Post a Comment