மக்கள் வசதிக்காக போக்குவரத்துத் துறையில் புதிய இணையதளம் அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

மக்கள் வசதிக்காக போக்குவரத்துத் துறையில் புதிய இணையதளம் அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 10 அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்' என்னும் இணையத ளத்தை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (9-_3_2023) தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம் தொடர்பான சந் தேகங்கள் மற்றும் புகார் களைத் தெரிவிக்கும் வகை யில் உதவி மய்யத்தைத் தொடர்பு கொள்ள1800 599 1500 என்ற இலவச எண்ணை அமைச்சர் அறி முகம் செய்தார். இதில் பெறப்படும் புகார்கள், குறைகளுக்கு அடையாள எண் ஒதுக்கப்பட்டு, அது தொடர்பான குறுஞ்செய்தி பயணிகளுக்கு அனுப்பப்படும். இந்த புகார்கள் மற்றும் குறை களை அந்தந்த போக்கு வரத்து கழகங்கள் உடனுக் குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அதேபோல், மாற்றுத் திறனாளிகள் ‘ஒகே கூகுள்' வழியாக இலவச எண் ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் வசதி யும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. தொடர்ந்து, போக் குவரத்து கழகங்களுக்கான ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீணீsuதீus.tஸீ.ரீஷீஸ்.வீஸீ எனும் பொது இணையதள வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் போக்குவரத்து கழ கங்களின் அமைப்பு, அவற் றின் பயணிகள் சார்ந்த சேவைகள், பேருந்து வருகை நேரம், முன்பதிவு, தொடர்பு எண்கள், பய ணிகள் தங்கள் குறை களைத் தெரிவித்தல், பய ணம் தொடர்பான தக வல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடி யும். மேலும், போக்குவரத் துக் கழகங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் போது அதன் வழித்தட விவரங்கள், நேர அட்ட வணை, கட்டண விவரம் குறித்த தகவல்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகை யில் இந்த இணைய தளத்தில் வழங்கப்பட இருக் கிறது. ஆங்கிலம், தமிழில் தகவல்களை பெறும் வகையில் இணை யதளம் உருவாக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘சட்டப்பேரவையில் வெளி யிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இத் திட் டம் தொடங்கப்பட் டுள்ளது. வரும் காலங் களில் இந்த இணையதள வசதிகளை கைபேசி செய லியில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறி வுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment