சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை : அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 10 சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் உலக சிறுநீரக நாள் கொண்டாடப்பட்டது.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 86 லட்சம் பேரை "மக்களை தேடி மருத் துவம்" திட்டத்தின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் பெருமளவு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2006ஆம் தொடங்கி உலகம் முழு வதும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் சர்க்கரை நோய் தொடர் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப் புகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் பாதிப்பு நோய் உள்ளாகிறது என்று கூறிய அவர் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் தாமாக எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ளக் கூடாது எனவும் சிறுநீரக பாதிப்பு என்பது பெரிய அளவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் தமிழ்நாட்டில் உள்ள இந்த பாதிப்புகளில் உள்ளவர் களை இருந்து  மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா வில் சிறுநீரக பாதிப்புக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது என்று பெருமிதம் தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனையை காட்டிலும் கூடுதல் வசிதகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் 1 கோடி பயனாளிகளை கடந்து செயல்படுத்தப் பட்டு வருவதாகவும், 39 லட்சம் 11 ஆயிரம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீரிழிவு நோய் உள்ள  27 லட்சத்து 35 ஆயிரம் பெற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த இரண்டு  நோய் பாதிப்பு உள்ள 19 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 86 லட்சம் பேரை "மக்களை தேடி மருத்துவம்" திட் டத்தின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் எதிர் காலத்தில் பெருமளவு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் 2,696 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்து கொண்டு இருப்பதாகவும், "கலைஞர் காப்பீட்டு திட்டம்" கொண்டு வந்த பின் சிறுநீரக மற்று அறுவை சிகிச்சை 2918 பேர் பயன் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment