ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா சிசு ஆரம்ப நிலை வளர்ச்சி பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கட்டணமில்லா சிசு ஆரம்ப நிலை வளர்ச்சி பரிசோதனை

சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங் கப்பட்டு உள்ளது.

ஓமந்தூரார் அரசு பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டு முழு உடல்பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது. இந்த திட்டத் தால் நாள் தோறும் 60-க்கும் மேற்பட் டோர் பயனடைந்து வருகிறார் கள். இந்த திட்டத்தை போலவே கர்ப்பிணிகளுக்கு என்று தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு மருத்துவமனை களிலும் இல்லாத வகையில், கருவில் உள்ள சிசுவின் ஆரம்ப நிலை வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனைத் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப் பட்டது. ரூ.1,000, ரூ.2 ஆயிரம் ஆகிய 2 வகைகளில் கட்டணங் களை செலுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணம் மூலம் சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் 'டபுள் மார்க்கர்' சோத னையும், சிசுவின் முதுகெலும்பு, மூக்கு, கழுத்து பகுதி மற்றும் குருதி ஓட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் கண்டறிய முடிகிறது.

இலவச திட்டம்

இந்த நிலையில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, கருவில் உள்ள குழந்தையின் நலன் குறித்து விழிப்புணர்வை கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்தும் நோக்கில், மாநக ராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனை களில் பேறுகால சிகிச்சை பெறும் 100 பெண்களுக்கு இலவ சமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் திட்டத்தை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை அறிமுகப் படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ மனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ஆனந்த குமார் கூறியதாவது:-

கர்ப்பிணிகளுக்கு 11 முதல் 14 வாரங்களுக்கு மேற் கொள்ளப் படும் ஆரம்ப நிலை சிசு வளர்ச்சி பரிசோதனையை இலவசமாக மேற்கொண்டு வருகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வசதி படைத்தவர் கள் தனியார் மருத் துவமனை களில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த பரிசோதனையை செய்து கொள்கிறார்கள். ஆனால், ஏழை, நடுத்தர கர்ப்பிணிப் பெண் களுக்கு இதுபோன்ற பரிசோ தனை செய்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை மரபணு பிரச்சினை இல்லாமல் வளர் கிறதா என்பதை கண்டறிய முடியும். ஓமந்தூரார் அரசு விழிப்புணர்வு பல்நோக்கு மருத் துவமனையில் புதிதாக நிறுவப் பட்டுள்ள சிசுவின் வளர்ச்சியை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு கருவியை ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கொள்முதல் செய்துள்ளோம். 

இலவச திட்டத்தின் மூலம் கடந்த 4 நாட்களில் 16 பேருக்கு இலவச பரிசோதனை செய்யப் பட்டு உள்ளது. இந்த பரிசோ தனையை மேற்கொள்ளவே தனியாக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 6 பேரை நியமித்து உள்ளோம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 200 பேர் வரை மட்டுமே பயனடைந்து உள் ளார்கள். மேலும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களி டம் ஏற்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் குறித்த மேலும் தகவல்களுக்கு 73388 35555 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள் ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment