எச்சரிக்கை! எச்சரிக்கை!! புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2025-இல் 15.7 லட்சம் பேராக உயரும்: மாநிலங்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

எச்சரிக்கை! எச்சரிக்கை!! புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2025-இல் 15.7 லட்சம் பேராக உயரும்: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி,மார்ச்16- -நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022-இல் 14.6 லட்சம் பேராக இருந்த நிலையில் 2025-இல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சம் பேராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக் கப்பட்டது.

இதுதொடர்பாக மாநிலங்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் நேற்று முன்தினம் (14.3.2023) எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி மய்யம் மற்றும் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின்படி நாட்டில் 2022 -இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 14.6 லட்சம் பேராக இருந்தது. இந்த எண்ணிக்கை 2025-இல் 15.7 லட்சம் பேராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 தொற்றா நோய்களான நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்தல், கட்டுப்படுத்துதல், கண்கா ணிக்கும் பணிகளை தேசிய சுகாதார இயக்ககம், விரிவு படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

30 வயதைக் கடந்தவர்களை இலக் காகக் கொண்டு அவர்களுக்கு தொண்டை புற்றுநோய், மார்பக புற்று நோய் அல்லது கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் சென்டர், நல மய்யங்களில் இப்பரிசோதனைகள் செய்யப் படுகின்றன.

 தேசிய சுகாதார இயக்ககத்தின் ஒரு பகுதியாக தேசிய நீரிழிவு, புற்றுநோய், இதயக் குழாய் அடைப்பு, வலிப்பு ஒழிப்பு திட்டத்தின் கீழ் இந்நோய் களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான ஒத்துழைப்பையும், நிதியுதவிகளையும் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்து வருகிறது.

 பொதுவான மூன்று வகை புற்று நோய்களான தொண்டை, மார்பகம், கர்ப்பப் பை புற்றுநோய்களைத் தடுக்க மருத்துவமனைகளின் உள்கட்டமைப் புகளை வலுப்படுத்துதல், மனிதவள மேலாண்மை, சுகாதார முன்னேற்றம், இந்நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தவிர, புற்றுநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தவும், ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைக்காகவும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம், உலக புற்றுநோய் தினம் அரசால் கடைப் பிடிக்கப்படுவதோடு, நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டு வருகின்றன.

அத்துடன் நாட்டின் 19 மாநிலங் களில் புற்றுநோய் மருத்துவமனைகள், 20 மூன்றாம் நிலை புற்றுநோய் மருத்துவ மய்யங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு புற்றுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 60:40 விகிதாசாரத்தில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலை சார்ந்த மாநிலங்களுக்கு 90:10 விகிதா சாரத்தில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: எந்த மாநிலத்திலும் பதிவு செய்யும் வசதி

உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிவு செய்வது தொடர் பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

 "ஒரே நாடு ஒரே கொள்கை' என்ற இலக்கின் அடிப்படையில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசனை செய்து வருகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற விரும்பும் நபர் தங்கள் மாநிலத்தின் இருப்பிடம் குறித்து விண்ணப்பிக்க முன்னர் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

தற்போது அந்த விதி களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் நாட்டின் எந்த மாநிலத்துக்குச் சென்றும் தாங்களாகவே தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment