பசுமைக் கண்ணாடி வீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

பசுமைக் கண்ணாடி வீடு

கூரை மேல் மட்டுமா வெயில் படுகிறது? பக்கவாட்டுச் சுவர்களின் மேலும்தான் படுகிறது. எனவே, சூரிய ஒளி மின் கருவியை, சுவர் கட்டு மானப் பொருளாகவே மாற்றினால் என்ன என்று சிந்தித்தனர், பிரிட்டனிலுள்ள 'பில்ட் சோலா'ரின் ஆராய்ச்சியாளர்கள். அதன் விளைவாக உருவா னதுதான் 'சோலார் ஸ்கொயர்டு' என்ற, முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆன சதுர செங்கற்கள்.

இந்தக் கற்களால் வீட்டுச் சுவர்களை அமைத்தால், வீட்டுக்குள் வெளிச்சத்திற்குப் பஞ்சமிருக்காது. குளிர் பிரதேசத்தில் கதகதப்பையும் வீட்டுக்குள் இது கொண்டு வரும்.

ஆனால், அதைவிட முக்கியமாக, சோலார் ஸ்கொயர்டு கண்ணாடிக் கற்களுக்குள், சூரிய ஒளியை மின்சாரமாக்கும் கருவிகளும் பதிக்கப் பட்டுள்ளன. எனவே, விளக்குகள், வெப்ப சாதனங் களின் பயன்பாட்டைக் குறைப்பதோடு, மின்சாரத் தையும் இந்தப் புதுமைக் கண்ணாடிச் சுவர்கள் உற்பத்தி செய்யும். வெறும் கண்ணாடி போல மட்டுமல்லாமல், சில வண்ணங்களிலும் சோலார் ஸ்கொயர்டு கற்கள் கிடைக்கவுள்ளன.

No comments:

Post a Comment