சில வரிச் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

சில வரிச் செய்திகள்

மறைந்துள்ளதை காட்டும் கருவி

பெரிய கிடங்குகளில், கொட்டிக் கிடக்கும் குவியலுக்குள் மறைந்திருக்கும் பொருட்களையும் 'பார்க்க' ஒரு கருவியை அமெரிக்காவின் எம்.அய்.டி., தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் தலையணி கருவியில், கணினிப் பார்வை மற்றும் கம்பியில்லா ரேடியோ அலைவரிசை உணரும் கருவி ஆகியவற்றை இணைத்து  இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிடங்கில் பொருட்களுக்கு ஆர்.எப்.அய்.டி., பட்டை பொருத்தப்பட்டிருப்பதால், இக்கருவியை அணிந்திருப்பவருக்கு, மறைந்திருக்கும் பொருட்களின் இருப்பிடம் எளிதில் தலையணி கருவியின் திரையில் தெரிந்துவிடும்.

வேரில் உள்ள சூட்சுமம்

சில கோதுமை வகைகள், பாசன பற்றாக்குறையிலும் நன்கு விளைகின்றன. இது குறித்த ஆய்வு 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளிவந்துள்ளது.

குறைவான பாசனம் அல்லது பகுதி வறட்சியை சமாளிக்க கோதுமைப் பயிர்கள் என்ன செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கோதுமை மர பணுக்களை ஆராய்ந்தபோது, வேர்களின் வளர்ச்சி யைத் தூண்டும் மரபணுக்கள், அத்தகைய கோதுமை களில் அதிகமாக இருந்தன.

அதற்கேற்ப, அந்த கோதுமைப் பயிர்களின் வேர் களும் நீளமாக இருந்தன. இந்த வேர்கள் தான் அதிக ஆழத்திலுள்ள நீரை உறிஞ்சி, நல்ல கோதுமை விளைச் சலுக்கு உதவுகின்றன என்பது தெரியவந்துள்ளது.

எட்டுக்காலியின் புத்திசாலி மூளை

ஆக்டோபஸ்கள் பெரிய தலையைக் கொண்டவை; நீர் வாழ் விலங்குகளில் புத்திசாலித்தனம் உள்ளவை. எனவே மனித மூளையை ஆராய்பவர்கள், ஆக்டோப சின் மூளை எப்படி வேலை செய்கிறது என ஆராயத் துடிப்பதில் ஆச்சரியமில்லை.

ஜப்பானிலுள்ள ஓகினோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், முதல் முறையாக ஆக்டோபசின் தலைக்குள் ஒரு கருவியை பொருத்தி ஆராயத் துவங்கியுள்ளனர்.

அக்கருவி, சுதந்திரமாக நீந்தி வாழும் ஆக்டோபஸ் மூளையின் சமிக்ஞைகளை விஞ்ஞானிகளுக்கு அனுப் பியபடியே இருக்கும். இது பெரிய மூளையுள்ள விலங்கு களின் சிந்திக்கும் தன்மையை அறிய உதவும்.

ரகசியம் காக்கும் சில்லு

இணையம் வழியே பணம் மற்றும் ரகசிய தகவல் களைப் பரிமாறுவதற்கு 'என்கோடிங் மற்றும் டிகோடிங்' முறை பயன்படுகிறது. அசல் செய்தியுடன் சங்கேதத்தைக் கலந்து அனுப்பினால், யாரும் தடுத்துப் படித்தறிய முடியாது.

இதற்கென அலைபேசியிலும் மடிக்கணினியிலும் சங்கேதத்தை சேர்த்தனுப்பவும், பிரித்துத் தரவும் சில சில்லுகள் இருக்கும். இதற்கு மாற்றாக, ஒரே சில்லை அமெரிக்காவின் ராணுவ அமைப்பான தார்ப்பாவின் நிதியுடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

எல்லாவித சங்கேதங்களையும் பிரித்து உரியவ ருக்குக் காட்டும் சில்லு அது. இந்த ஒரே சில்லை பொருத் தினால் போதும். இது அதிக மின்சாரத்தை உறிஞ்சாது என்பது இதன் சிறப்பு.

சாட் ஜி.பி.டி.,க்கு போட்டி

செயற்கை நுண்ணறிவுத் தளமான 'சாட் ஜி.பி.டி.,'யை உருவாக்கியவர்களுள் ஒருவர் எலான் மஸ்க். அவர் 2015ல் ஓப்பன் ஏ.அய்., என்ற அமைப்பு மூலம் இதை உருவாக்கினார்.

ஆனால், 2018இல் அதிலிருந்து விலகினாலும், சாட் ஜி.பி.டி., 'திகிலூட்டும் வகையில் அருமையாக' இருப்ப தாக பாராட்டினார் மஸ்க். இருந்தாலும், மைக்ரோசாப்ட், அதில் முதலீடு செய்ததால், மஸ்க், சாட் ஜி.பி.டி.,யை விமர்சனம் செய்ததோடு, போட்டியாக இன்னொரு செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளத்தை உரு வாக்கி வருகிறார்.

No comments:

Post a Comment