சோனியாவை ஒரு 'ஜெர்சி மாடு' என்றும், ராகுலை 'கலப்பினக்கன்று' என்றும் சொன்னவர்தானே மோடி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

சோனியாவை ஒரு 'ஜெர்சி மாடு' என்றும், ராகுலை 'கலப்பினக்கன்று' என்றும் சொன்னவர்தானே மோடி?

பத்திரிகையாளர் தீபால் திரிவேதி

புதுடில்லி, மார்ச் 27- சோனி யாவை ஒரு ஜெர்சி மாடு என்றும், ராகுலை கலப்பினக்கன்று என்றும் சொன்னவர்தானே மோடி? என்று பத்திரிகையாளர் தீபால் திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார். 

சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் மிக மிக இழிவாகப் பேசியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி  என்று குஜராத் பத்திரிகை யாளர் தீபால் திரிவேதி அம்பலப் படுத்தியுள்ளார்.  

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2019  ஏப்ரல் 13 அன்று கருநாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.  

ராகுலின் இந்தப் பேச்சு, பிரதமர்  நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத் தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜக சட்டமன்ற உறுப் பினரும், குஜராத் மாநில மேனாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி,  சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2023 மார்ச் 23 அன்று தலைமை ஜூடிசி யல் மாஜிஸ்திரேட் நீதிபதி எச்.எச்.வர்மா, இந்திய தண்டனை சட்டப் பிரிவு  504-இன் கீழ் ராகுல்  காந் தியை குற்றவாளி என அறிவித்து,  அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக தீர்ப் பளித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே மோடி அர சானது, தீர்ப்பு வந்த வெறும் 

2 மணி நேரத்தில் அதிவிரைவாக ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்துள்ளது. 

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ள நிலையில், பாஜகவின் ஜனநாயகமற்ற இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத்  தெரிவித்துள்ளனர். 

பொது நலன் மனு

மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத் தால் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட உடனேயே அவர்களின் பதவியைப் பறிப்பது, இந்திய அரச மைப்பு மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும், எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) அரசமைப்பு சட்டத்திற்கு  எதிரானது என அறி விக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குஜராத் பெண்  பத்திரிகையாளரும், “வைப்ஸ் ஆப் இந்தியா” ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஆசிரியருமான தீபால் திரிவேதி, ராகுல் காந்தி பேசியது நையாண் டியானது; ஆனால், பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில், மிகமிகக் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி உண் மையை அம்பலப்படுத்தியுள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது:

நான் 2001-ஆம் ஆண்டு முதல் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரி கையின்  செய்தியாளராக இருந்த காலத்திலிருந்தே குஜராத்தில் சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ரதயாத்திரையின் பல்வேறு நிகழ்வுகள், பாஜகவினரின் பேச்சுக் களை தொகுத்து உள்ளேன்.  2001ஆம் ஆண்டு முதல் (மோடி  ஆட்சிக்கு வந்த பின்பு) குஜராத் மாநிலத்தில் பொதுச் சொற் பொழிவுகளில் கண்ணியம் மரணிப் பதை நான் நேரடியாக பார்த் திருக்கிறேன். அதற்கு முன் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும் இந்த அளவுக்கு பொதுச் சொற் பொழிவுகளில் கண்ணியத்திற்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. 1998-ஆம் ஆண்டு குஜராத்தில் பாஜக தேசிய செயற் குழு கூட்டம் நடைபெற்றபோது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பாஜகவுக்கான அவரது கனவு என்ன என்று ஒருமுறை கேட்டேன். இந்தியாவை பாஜக ஆட்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆனால் நாங்கள் காந்தியாரின் நிலத்தில் இருந்து தொடங்கியுள்ளோம். குஜ ராத் எங்களுக்கு சிறப்பு.  காந்தியார் வகுத்த கொள்கைகளை பின்பற்று வோம்’’ என்று யதார்த்தமாக கூறி னார். ஆனால் மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ப தற்கு முன்பும், பொறுப்பேற்ற பிறகும் அவர் பேசிய பொதுப் பேச்சுக்களில் கண்ணியத்தை படு கொலை செய்ததற்காக மோடியைத் தவிர வேறு யாருக்கும் முடிசூட்டப் பட முடியாது. 2001-ஆம் ஆண்டு முதல் அவ்வளவு மோசமாக பேசினார்.

‘கவுரவ் யாத்திரை’யில் 

இழி பேச்சு

மோடி குஜராத் முதலமைச்சராக ஆட்சி யில் அமர்ந்து அடுத்த ஓராண்டில் 2002-ஆம் ஆண்டு கவுரவ் யாத்திரையில் இஸ்லாமிய மக்களை மிக இழிவாகப் பேசினார். ‘‘இப்படி இருந்தால் நாடு எப்படி வளரும்? முஸ்லிம்கள் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதன் விளைவாக அவர்களுக்குப் பல குழந்தைகள் இருக்கின்றனர்’’ என்று கூறினார். மேலும், ‘‘குஜராத் பெண்கள் ஊட் டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்ற கருத்து தவறானது. நம்முடைய பெண்கள் உருவத்தில் மிகுந்த அக் கறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் ஒல்லியாக இருக்க விரும்புகிறார்கள்’’ என நாகரீகமற்ற முறையில் விளக்கம் அளித்தார். இந்த கவுரவ் யாத்திரையின் வீடியோ யூடியூப் முன்பு இணைய தளத்தில் இருந்தது; ஆனால், பிரதமராக மோடி  வந்த பின்பு யூடியூப் நீக்கம் செய்யப்பட்டு விட்டது. தேடினாலும் கிடைக்க வில்லை. 

‘ஜெர்சி மாடு, கலப்பினக்கன்று’ 

2004-ஆம் ஆண்டு குஜ ராத்தில் மோடி, ‘‘சோனியா பென் டூ ஏக் ஜெர்சி கே சே’’ என்றும், ‘‘ஆ ராகுல் ஏக் ஹைப்ரிட் வச்சர்டு சே (சோனியா பென் ஒரு ஜெர்சி மாடு, மற்றும் ராகுல் ஒரு கலப்பின கன்று)’’ என்றும் குறிப் பிட்டார். மோடியின் இந்த இழிவான பேச்சை அமை தியாக விழுங்கியதற்காக சோனியா காந்திக்கு நாம் அதிக மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘குஜராத்திகளாகிய 

நாங்கள் பழகிவிட்டோம்’ 

காங்கிரஸ் மக்களவை உறுப் பினர், ராகுல் காந்தியின் “திருடர் மோடி” என்ற கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சை யையும், எந்தப் பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், ‘மோடி’ பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டுகொள்ள வில்லை. இதற்கு முக்கிய காரணம், 2001-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்) மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துகளுக்குப் பழகிவிட்டோம் என்பதுதான்.


No comments:

Post a Comment